பர்னிச்சர் தாயரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

 

பர்னிச்சர் தாயரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

குன்றத்தூர் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளன.

சென்னை அருகே குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கம் சிப்காட்டில் பர்னிச்சர் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. அங்கு இன்று பிற்பகல் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக ஊழியர்கள் அனைவரும் பணியிடத்தில் இருந்து வெளியேறிய நிலையில், தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.

பர்னிச்சர் தாயரிப்பு நிறுவனத்தில் தீ விபத்து: ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம்!

விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். ஆனால், அதற்குள்ளாகவே பர்னிச்சர் நிறுவனத்தில் இருந்த ரூ.20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதே போன்று சேலம் லீபஜார் பகுதியில் பிரபுராவ் என்பவருக்கு சொந்தமான பஞ்சு கிடங்கிலும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு தீயணைப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.