“ரெண்டு வயது குழந்தையோடு, 16 ஆண்டு காதலோடு” காதலரை மணந்த பின்லாந்து நாட்டு பெண் பிரதமர் 34 வயது சன்னா மெரின் -உலகின் இளம் வயது பெண் அதிபர்.

 

“ரெண்டு வயது குழந்தையோடு, 16 ஆண்டு காதலோடு” காதலரை மணந்த பின்லாந்து நாட்டு பெண் பிரதமர் 34 வயது சன்னா மெரின் -உலகின் இளம் வயது பெண் அதிபர்.

ஃபின்லாந்து நாட்டு பிரதமர் 34 வயதான சன்னா மரின், அவரது 16 ஆண்டு காதலர் மார்கஸ் ரெய்கோனென் என்பவரை கடந்த சனிக்கிழமை திருமணம் செய்து கொண்டார் .இந்த 16 ஆண்டு காதலர்களுக்கு இரண்டு வயதிலொரு பெண் குழந்தையும் உள்ளது குறிப்பிடத்தக்கது .

“ரெண்டு வயது குழந்தையோடு, 16 ஆண்டு காதலோடு” காதலரை மணந்த பின்லாந்து நாட்டு பெண் பிரதமர் 34 வயது சன்னா மெரின் -உலகின் இளம் வயது பெண் அதிபர்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான ஹெல்சின்கியில் உள்ள கேசரந்தாவில் நடந்த இந்த திருமணத்தில், நெருங்கிய நணபர்கள் மற்றும் உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர் .அவர்கள் திருமணத்திற்கு பிறகு தம்பதியினர் தங்கள் திருமண ஆடைகளில் ஒரு வெள்ளை நிற பூக்களுடன் ஒரு படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர் .

உலகின் இளம் வயது அழகிய பெண் பிரதமரான 34 வயது சன்னா மெரின் ,இந்த பிரதமர் பதவிக்கு வந்து எட்டு மாதங்களுக்கு பிறகு அவரின் காதலரை கைப்பிடித்தார் .
சன்னா மரின் மற்றும் ரெய்கோனென் ஆகியோர் 16 ஆண்டுகளாக ஒன்றாக ‘லிவிங் டுகெதராக’ வாழ்ந்துகொண்டிருந்தனர் என்றும் அவர்களுக்கு 2 1/2 வயது மகள் உள்ளது என்று பின்லாந்து அரசு தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களின் எப்போதும் ஆக்டிவாக இருப்பவராகவும் , சுற்றுச்சூழல் பிரச்சினைகளை தீர்க்க தீவிர ஆர்வமுள்ளவராகவும் இருந்த சமூக ஜனநாயகவாதியான மரின்,கடந்த ஆண்டு டிசம்பரில் பின்லாந்தின் பிரதமரானார்.அந்த நேரத்தில், உலகின் மிக இளைய பிரதமராக அவர் இருந்தார். பின்லாந்து அரசாங்கம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் ஞாயிற்றுக்கிழமை இந்த தகவலை தெரிவித்துள்ளது.

“ரெண்டு வயது குழந்தையோடு, 16 ஆண்டு காதலோடு” காதலரை மணந்த பின்லாந்து நாட்டு பெண் பிரதமர் 34 வயது சன்னா மெரின் -உலகின் இளம் வயது பெண் அதிபர்.