FIM மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இந்திய பெண் சாம்பியன்

 

FIM மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இந்திய பெண் சாம்பியன்

FIM மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இந்திய பெண் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

FIM மோட்டார் சைக்கிள் பந்தயத்தில் இந்திய பெண் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

பெங்களூருவைச் சேர்ந்த ஐஸ்வர்யா பிஸ்ஸே, அடிப்ப‌டையில் ஒரு மாடல் அழகி. ‌சின்ன வயதில் இருந்தே பைக்குகளின் மேல் தீரா காதல் கொண்ட இவர், டிவியில் மோட்டோ ஜீபி பைக் ரேஸ் பார்த்து அதில் மேலும் ஈர்க்கப்‌ட்டார்.‌ ஒருமுறை வாடகை டாக்ஸி ஒன்று ஐஸ்வர்யாவின் பைக்கை இடித்துத் தள்ள தோள்பட்டை எலும்பு இடம் பெயர்ந்து நான்கு மாதங்கள் மருத்துவச் சிகிச்சையில் இருந்துள்ளார்.‌ அப்போது தான் ஐஸ்வர்யாவுக்கு ரேஸிங் மீதான ஆர்வம் வெறித்தனமாக மாறியது. 5‌ முறை தேசிய சாம்பியன்ஷிப்‌ பட்டத்தை வென்று குவித்த ஐஸ்வர்யா, சர்‌வதேச அளவிலும் சாதனைப் பயணத்தை தொடங்கியுள்ளார்.

ஐஸ்வர்யா

நடப்பு ஆண்டிற்கான FIM மோட்டார் சைக்கிள் உலகக் கோப்பை போட்டியில் , மின்னல் வேகத்தில் பைக் ஓட்டி உ‌லகையே தன்பக்கம் திரும்பி ‌பார்க்கச்செய்துள்ளார். 
ஜூனியர் பிரிவில் கலந்து கொண்ட அவர், துபாயில் நடைபெற்ற முதல் சுற்றில் முதலிடம்‌ பிடித்து சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தினார்.

போர்சுகளில் நடந்த இரண்டாவது சுற்றுப் பந்தயத்தில் மூன்றாம் இடமும், ஸ்பெயினில் நடந்த 3ஆவது சுற்றில் ஐந்தாம் இடமும், ஹங்கேரியில் நான்காம் இடமும் பிடித்தார். 

 ஜுனியர் பிரிவி‌ல் ஒட்டுமொத்தமாக 46 புள்ளிகளுடன் இரண்டாம் பிடித்து பதக்க மேடைஏறினார் ஐஸ்வர்யா. 2021-ல் நடக்கப் போகும் டக்கார் ராலியில் பங்கேற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச்செல்ல வேண்டும் என்பதே ஐஸ்வர்யாவின் அடுத்த இ‌‌‌லக்காகும்.