நவம்பர் 22ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!

 

நவம்பர் 22ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் நவம்பர் 22 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் அதிகாரி ஜெயச்சந்திரன் தேர்தல் தேதியை தற்போது அறிவித்துள்ளார். தேர்தலானது சென்னை எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் 22 ஆம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணிவரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 2020- 22 ஆண்டு தேர்தலுக்கான இறுதி செய்யப்பட்ட வாக்காளர் பட்டியல் நவம்பர் 12ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 30க்குள் தேர்தலை நடத்தி முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 22ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!

இதனிடையே தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்து விட்டது. இதையடுத்து முடங்கி கிடந்த பணிகளை மேற்கொள்ள மாவட்ட பதிவாளராக சேகர் என்பவரை சங்கத்தின் தனி அதிகாரியாக தமிழக அரசு நியமித்தது. ஆனால் தனி அதிகாரி நியமனத்தை எதிர்த்து விஷால் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நவம்பர் 22ல் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்!

இதை தொடர்ந்து கடந்த செப். 30 ஆம் தேதி தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் மேலும் 3 மாதம் அவகாசம் வழங்கியது குறிப்பிடத்தக்கது.