‘அதிமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவரை’ அடித்து உதைத்த திமுக பிரமுகர்!

 

‘அதிமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவரை’ அடித்து உதைத்த திமுக பிரமுகர்!

திருவள்ளூர் அருகே கொரோனா நிவாரண நிதி வழங்கும் தகராறில் அதிமுக திமுகவினருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டு ஊராட்சியின் தலைவர் சீனிவாசன். இவர் அதிமுகவை சேர்ந்தவர். அந்த ஊராட்சியில் இருக்கும் இரண்டு ரேஷன் கடைகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண நிதி வழங்கும் பணி தொடங்கியுள்ளது. அந்த நிவாரணத் தொகையை பொதுமக்களுக்கு வழங்குவது தொடர்பாக அதிமுக திமுகவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

‘அதிமுகவை சேர்ந்த ஊராட்சித் தலைவரை’ அடித்து உதைத்த திமுக பிரமுகர்!

திமுக ஆட்சியில் அதிமுகவினர் கொரோனா நிவாரண நிதியை வழங்குவதா? என கேள்வி எழுப்பிய திமுகவினர், நாங்கள் தான் பணத்தை கொடுப்போம் என ஊராட்சி மன்றத் தலைவர் ஸ்ரீனிவாசனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு அதிமுக தரப்பினர், முதலில் ஒரு சிலருக்கு நாங்கள் வழங்கி முடித்தவுடன் நீங்கள் கொடுங்கள் எனக் கூறியுள்ளனர். அதை ஏற்க மறுத்த திமுக பிரமுகர் பரமேஸ்வரனின் ஆதரவாளர்கள், சீனிவாசனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

இக்காட்சிகள் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகி உள்ளது. இதையடுத்து சீனிவாசன், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவினருக்கு எதிராக புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கட்சி பாகுபாடின்றி அரசியல் கட்சியினர் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டுமென மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கும் நிலையில் திமுகவினர் இதுபோன்ற சண்டைகளில் ஈடுபடுவது கட்சியினரை அதிர்ச்சியடைய செய்தது.