வாக்கு எண்ணும் அறையில்… அதிமுக – அமமுகவினர் இடையே அடிதடி!

 

வாக்கு எண்ணும் அறையில்… அதிமுக – அமமுகவினர் இடையே அடிதடி!

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் இக்கட்டான சூழலில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் மக்கள் கூட கூடாது, வெற்றி கொண்டாட்டங்கள் கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

வாக்கு எண்ணும் அறையில்… அதிமுக – அமமுகவினர் இடையே அடிதடி!

பதற்றத்தை தணிக்கும் விதமாகவும் வாக்கு எண்ணிக்கையை சுமுகமாக கொண்டு செல்லவும் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரத்தின் படி, திமுக 69 தொகுதிகளிலும் 50 தொகுதிகளில் அதிமுகவும் முன்னிலையில் உள்ளன. அமமுக 2 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யம் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன.

இவ்வாறு வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வரும் சூழலில், களமிறங்கியுள்ள வேட்பாளர்களுக்கு மத்தியிலும் கட்சி தொண்டர்கள் மத்தியிலும் மோதல் போக்கு நீடிக்கிறது. சாத்தூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் அறையில் அதிமுகவினருக்கும் அமமுகவினருக்கும் இடையே அடிதடி மோதல் வெடித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.