வெந்தயக் கீரை காரக் குழம்பு

 

வெந்தயக் கீரை காரக் குழம்பு

சமையலில் வெந்தயக்கீரை காரக் குழம்பு என்பது புது வகையான ருசி மட்டுமல்ல, குடும்பத்தினருக்கு நலம் சேர்ப்பது என்கிற வகையில் இருக்கும். வாரம் ஒருமுறை இதை செய்யும்போது
நீங்கள் சமையல் ராணி மட்டுமல்ல ஆரோக்கிய ராணி என்ற பட்டமும் பெறுவீர்கள்.

வெந்தயக் கீரை காரக் குழம்பு

தேவை:
வெந்தயக்கீரை-1/2 கப்,
சின்ன வெங்காயம் 20,
பூண்டு-10 பல்,
புளி- தேவையானஅளவு,
சாம்பார்தூள் 2 தேக்கரண்டி,
சிவப்பு மிளகாய்தூள்-1தேக்கரண்டி,
மல்லிதூள்-1தேக்கரண்டி,
மஞ்சள்தூள்-1/4தேக்கரண்டி,
பெருஞ்சீரக தூள்-1/2 தேக்கரண்டி,
உப்பு-தேவையானஅளவு,
நல்லெண்ணெய்-1தேக்கரண்டி,
கடுகு-1/4 தேக்கரண்டி,
வெல்லம்-சிறிய துண்டு.

எப்படிச்செய்வது?

வெந்தயக் கீரை காரக் குழம்பு

வெந்தயக்கீரையை நன்றாக கழுவி வெட்டி வைக்கவும். சின்ன வெங்காயம், தக்காளியை சிறு துண்டுகளாக வெட்டி வைக்கவும். புளியை தண்ணீரில் கரைத்து வைக்கவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து, பூண்டு மற்றும் நறுக்கப்பட்ட வெங்காயம் சேர்த்து வதக்கி தக்காளி சேர்க்கவும். பின்

வெந்தயக் கீரை காரக் குழம்பு

வெந்தயக் கீரையை சேர்த்து வதக்கி புளிகரைசல் சேர்த்து அதனுடன் சாம்பார்தூள், மிளகாய்தூள், மல்லிதூள், மஞ்சள்தூள், பெருஞ்சீரகம்தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும் வரை சமைக்கவும். இப்போது வெல்லம் சேர்த்து ஒரு நிமிடம் கொதிக்கவிட்டு அடுப்பை அணைக்கவும்.
நல்லெண்ணெய் 1 தேக்கரண்டி ஊற்றி பரிமாறவும்.

– இர.போஸ்