பெண்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் பயம்!

 

பெண்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் பயம்!

ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்னைகள் பற்றி அதிக அளவில் பேசப்படுகிறது. அதே நேரத்தில் பெண்களுக்கு ஏற்படக் கூடிய பிரச்னைகள் பற்றி பொிய அளவில் யாரும் கவலைப்படுவது இல்லை. 31 சதவிகித ஆண்கள் உடல், மனம் சார்ந்த பாலியல் பிரச்னைகளை கொண்டவர்களாக உள்ளார்கள் என்றால், பெண்களில் 43 சதவிகிதம் பேருக்கு பிரச்னைகள் உள்ளது என்கிறது மருத்துவ ஆய்வுகள்.

பெண்களின் தாம்பத்திய வாழ்க்கைக்கு வேட்டு வைக்கும் பயம்!

பெண்கள் தங்களுக்கு உள்ள பிரச்னைகளைப் பற்றி வெளியே சொல்வது இல்லை. அதிலும் பலருக்கு இது எல்லாம் குணப்படுத்தக் கூடிய விஷயம்தான் என்பது கூட தெரியாது என்பதுதான் வேதனை. உடல் பிரச்னைகளாவது ஓரளவுக்கு வெளியே சொல்கின்றனர். மன ரீதியான பாதிப்புகளைப் பற்றி அவர்கள் வாயே திறப்பது இல்லை.

உடலுறவின்போது உச்சம் எட்ட முடியாத நிலை (ஆர்கஸமிக் டிஸ்ஃபங்ஷன்), வெஜைனல் தசை இறுக்கம் அடைந்து தாம்பத்தியம் மேற்கொள்ள இயலாமை (Vaginismus), தாம்பத்திய உறவின்போது அல்லது உறவுக்குப் பிறகு வலி போன்றவை பெண்கள் சந்திக்கும் முக்கிய பாலியல் பிரச்னைகள் ஆகும். இதற்கு, பாலியல் தொடர்பான மனப் பதற்றம், பயம், மன அழுத்தம், குற்றவுணர்வு, அதிர்ச்சி போன்றவை காரணமாகிறது.

சிறுவயதில் பாலியல் ரீதியாக ஏற்பட்ட அதிர்ச்சி, தாம்பத்தியம், முதலிரவு பற்றி தோழிகள் கூறியதால் வந்த பயம் போன்றவை கூட வெஜைனல் தசை இறுக்கத்துக்குக் காரணமாகிவிடுகிறது.

முதன் முறை தாம்பத்தியத்தில் ஈடுபடும்போது ஆண், பெண் என இருவருக்குமே தசை கிழிவு ஏற்பட்டு ரத்தம் வெளிப்படும். அதன் பிறகு, இந்த பயம் காரணமாக சில பெண்கள் தாம்பத்தியம் என்றாலே அலறும் நிலை உள்ளது. இதை எல்லாம் கணவனிடமும் கூற முடியாமல் வாழ்க்கையே நரகமாக மாறிவிடுகிறது.

ஆனால் இந்த பிரச்னைகளை எல்லாம் எளிதில் கையாள முடியும். இதற்கு தகுந்த மருத்துவர்களை அணுகி ஆலோசனை பெற வேண்டும். மனதில் உள்ள பயம், பதற்றத்தை நீக்கிவிட்டாலே அனைத்தும் சரியாகிவிடும்.

பெண்களுக்கு தாம்பத்தியம் தொடர்பான அறிவியல்பூர்வமான விளக்கம் அளிப்பது, மனப் பதற்றத்தை நீக்க சிகிச்சை, தாம்பத்தியத்தின் போது வலி ஏற்படுவதைக் குறைக்கும் வழிமுறைகளை கற்றுத் தருவதன் மூலம் பெரும்பாலான பாலியல் பிரச்னைகளும் தீர்க்கப்பட்டுவிடும். இதற்காக சைக்கோதெரப்பி, பிஹேவியர் மாடிஃபிகேஷன் தெரப்பி, சப்போர்ட்டிவ் தெரப்பி என சில சிகிச்சைகள் உள்ளன.

இதுதவிர பெண்களுக்கு சீரற்ற மாதவிலக்கு, ஓ.பி.சி.டி, கர்ப்பப்பை வாய் புற்றுநோய், ஹார்மோன் பிரச்னை என்று உடல் சார்ந்த சில பிரச்னைகளும் உள்ளன. இதை மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று சரி செய்யலாம்.

எந்த ஒரு உறவு முறையாக இருந்தாலும் அதில் பிரச்னையே வராது என்று கூற முடியாது. பிரச்னை வந்தால் சமாளிக்க முடியாமல் விட்டு ஓடுவதைக் காட்டிலும், அதை எதிர்கொள்ள வேண்டும். எனவே, பிரச்னைகள் பற்றி கவலைப்படாமல் அதை தீர்க்க என்ன வழி என்று யோசித்தால் தாம்பத்தியத்தில் ஏற்படக் கூடிய பெரும்பாலான பிரச்னைகள் எளிதில் தீர்க்கப்பட்டுவிடும்!