கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் !

கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் !

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் !

உத்திரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் துணை ஆட்சியராக பணியாற்றிய சௌமியா பாண்டே சமீபத்தில் நோடல் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இதனிடையே சௌமியா பாண்டே கர்ப்பமாக இருந்த நிலையிலும் அலுவலகம் வந்து பணிசெய்து வந்துள்ளார். இதை தொடர்ந்து கடந்த 3 வாரங்களுக்கு முன்பு ஆட்சியர் சௌமியாவுக்கு குழந்தை பிறந்தது. இருப்பினும் அவர் 14 நாட்களிலேயே தனது கைக்குழந்தையுடன் மீண்டும் பணிக்கு திரும்பினார். கொரோனா காலத்தில் பணிச்சுமை அதிகமாக இருந்ததால் அவர் அலுவலகம் வந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்தனர்.

கைக்குழந்தையுடன் பணிக்கு திரும்பிய பெண் ஐஏஎஸ் அதிகாரி பணியிட மாற்றம் !

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி சௌமியா பாண்டே பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். காசியாபாத்திலிருந்து கான்பூருக்கு இவர் பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன ஆனால் இது வழக்கமான பணி மாற்றம் தான், அவர் கைக்குழந்தையுடன் பணிக்கு வந்ததால் கிடைத்த பணி மாற்றம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.