புலம்பெயர்ந்தோர் நகரங்களுக்குத் திரும்ப விரும்பவில்லை – அதிக பொருளாதார வீழ்ச்சி அச்சம்

 

புலம்பெயர்ந்தோர் நகரங்களுக்குத் திரும்ப விரும்பவில்லை – அதிக பொருளாதார வீழ்ச்சி அச்சம்

கொரோனா அச்சத்தால் நாட்டில் நகரங்களில் இருந்து வெளியேறிய புலம்பெயர்ந்தோர் மீண்டும் அங்கு திரும்ப விரும்பவில்லை என தெரிகிறது.

மார்ச் முதல் மே வரை விதிக்கப்பட்ட உலகின் மிகப் பெரிய கொரோனா பொதுமுடக்கத்தால் சுமார் 1 கோடிக்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் வேலையின்மை, பசி, குடும்பத்தை விட்டு பிரிந்திருந்தது போன்ற காரணங்களால் மீண்டும் தங்கள் சொந்த ஊருக்கே திரும்பினர். இந்தியாவின் பெருநகரங்களில் இருந்து லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் கிராமத்திற்கு திரும்பினர்.

புலம்பெயர்ந்தோர் நகரங்களுக்குத் திரும்ப விரும்பவில்லை – அதிக பொருளாதார வீழ்ச்சி அச்சம்

ஆனால் மூன்று கட்டமாக இந்தியாவில் பொதுமுடக்கம் படிப்படியாக தளர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரமான இந்தியாவில் இயல்பு வாழ்க்கைக்கு மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக திரும்பி வருகின்றனர். கொரோனா பரவல் மார்ச் மாதத்தில் இருந்ததை காட்டிலும் அசுர வேகத்தில் பரவினாலும், குடும்ப கஷ்டம் காரணமாக மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வேலை பார்த்தே ஆக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இருப்பினும், கொரோனா அச்சம் காரணமாக நகரங்களை விட்டு வெளியேறி சொந்த ஊருக்கு சென்ற புலம்பெயர் தொழிலாளர்கள் இன்னும் சில வருடங்களுக்கு நகரங்களுக்கு திரும்ப விரும்பவில்லை என்றே தெரிகிறது. இயல்பு வாழ்க்கையை தூண்டும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் உருவாக்கி வருகின்றன. ஆனால் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லாதது, நோய் பயம், நிலையில்லாத பணிச்சூழல் காரணமாக புலம்பெயர் தொழிலாளர்கள் நகரங்களுக்கு மீண்டும் செல்வதற்கு தயக்கம் காட்டுகின்றனர்.