Home தொழில்நுட்பம் பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு எதிராக களமிறங்கும் FAU-G: முன்பதிவில் சாதனை!

பப்ஜிக்கு மாற்றாக இந்தியாவில் உருவாகியிருக்கும் FAU-G கேமை சுமார் 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

சிறுவர்கள், இளைஞர்களின் நாடித்துடிப்பாக விளங்கியது பப்ஜி கேம். விளையாட்டுப் பிரியர்களின் பெருவாரியான சாய்ஸாக பப்ஜி இருந்தது. சாப்பிட மறந்தாலும் பப்ஜியில் விளையாட மறக்க மாட்டார்கள். பப்ஜியால் பணம் முதல் உயிர் வரை இழந்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்ட பப்ஜி கேமை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மத்திய அரசு இந்தியாவில் தடை செய்தது. பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி தடை செய்யப்பட்டது. இந்த அறிவிப்பு கேமர்களை தூக்கிவாரிப் போட்டது.

பப்ஜியை தவிர்த்து வேறு எந்த கேமையும் கனவில் கூட நினைத்திடாத அவர்களுக்கு மிகப்பெரிய ஷாக். இந்த ஷாக்கை குறைப்பதற்காக இந்தியாவிலேயே பப்ஜி போன்று FAU-G (The Fearless and United Guards) என்ற பெயரில் ஒரு கேமை nCore Games நிறுவனம் கண்டுபிடித்தது. ஆரம்பத்தில் இதற்கு பெரிய வரவேற்பு இல்லை என்ற போதிலும், தற்போது ஏராளாமானோர் முன்பதிவு (Pre-registration) செய்துள்ளனர்.

நடிகர் அக்‌ஷய் குமார் இந்த கேமின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறார். FAU-G கேம் வருகைக்கான அறிவிப்பை அவர் தான் வெளியிட்டார். இந்த கேம் ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று அதிகாரப்பூர்வமாக வெளியாகிறது.

முன்னதாக, நவம்பர் மாதம் கூகுள் பிளே ஸ்டோரில் இந்த கேம் அப்டேட் செய்யப்பட்டது. அதில் Pre-registration ஆப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த ஆப்சனை கிளிக் செய்தால், கேம் ரிலீஸாகும் நேரம் உங்களுக்கு நோட்டிபிகேஷன் வரும்.

அந்த வகையில் தற்போது வரை 40 லட்சம் கேமர்கள் Pre-registration செய்திருப்பதாக nCore Games இணை நிறுவனர் விஷால் கொண்டல் தெரிவித்திருக்கிறார்.

முன்பதிவு ஆரம்பமான முதல் நாளிலேயே 10 லட்சம் கேமர்கள் Pre-registration செய்ததாகவும் கூறினார். இந்த கேம் சைஸ் ஸ்மார்ட்போன்களின் மாடல்களை பொறுத்து மாறுபடும் என்று கூறிய அவர், ஐபோன், ஐபேட்களிலும் வெளியாகும் என்றார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

கல் குவாரி அமைக்க எதிர்ப்பு… தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை…

தூத்துக்குடி ஶ்ரீவைகுண்டம் அருகே கல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுகவுடன் மமக, முஸ்லீம் லீக் தொகுதி பங்கீடு கையெழுத்தானது

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டணி தொடர்பாக திமுக இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில், மமகவும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியும் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சு வார்த்தையில் உடன்பாடு...

கங்கனா ரணாவத்துக்கு பிடிவாரண்ட்

பாலிவுட் நடிகர் சுசாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கங்கன ரணாவத், இந்தி பாடலாரிசியர் ஜாவித் அக்பர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியின் பாதுகாப்பை அதிகரிப்பது எப்படி?

ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பீட்ரூட் மிகவும் ஆரோக்கியமானது மட்டுமல்ல, சருமம் மற்றும் முடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தக் கூடியது. பீட்ரூட்டை பயன்படுத்தி சருமம் மற்றும் முடியை எப்படி இயற்கையான ஆரோக்கியமான முறையில் பராமரிப்பது...
TopTamilNews