அமித்ஷாவுடன் ஃபட்னாவிஸ் திடீர் சந்திப்பு! –

 

அமித்ஷாவுடன் ஃபட்னாவிஸ் திடீர் சந்திப்பு! –

மகாராஷ்டிராவிலும் ஆட்சியைக் கவிழ்க்கும் திட்டமா?
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திடீரென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதனால், மகாராஷ்டிராவிலும் ஆட்சிக் கவிழ்ப்பில் பா.ஜ.க ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

அமித்ஷாவுடன் ஃபட்னாவிஸ் திடீர் சந்திப்பு! –
கர்நாடகம், மத்தியப் பிரதேசத்தைத் தொடர்ந்து தற்போது ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. சச்சின் பைலட் தலைமையிலான எம்.எல்.ஏ-க்கள் அசோக் கெலாட்டுக்கு எதிராக போராடி வருகின்றனர். இதனால் இன்னும் எத்தனை நாட்களுக்கு ராஜஸ்தான் அரசு நீடிக்குமோ என்ற கவலை மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை மகாராஷ்டிர முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் டெல்லியில் சந்தித்துப் பேசினார்.

அமித்ஷாவுடன் ஃபட்னாவிஸ் திடீர் சந்திப்பு! –

மகாராஷ்டிராவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி அமைத்து சிவசேனா ஆட்சியைப் பிடித்தது. இதனால் ஆபரேஷன் லோட்டஸ் என்ற பெயரில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி எம்.எல்.ஏ-க்களை பா.ஜ.க இழுக்க முயற்சி செய்து வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு உள்ள நிலையில் தேவேந்திர ஃபட்னாவிசின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இது குறித்து தேவேந்திர ஃபட்னாவிசிடம் கேட்டபோது, “அமித்ஷாவுடன் நடந்த சந்திப்பு அரசியல் ரீதியானது இல்லை. மகாராஷ்டிராவில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு நிதி உதவி தொடர்பாக அவரை சந்தித்தேன். மேலும் மாநிலத்தில் கொரோனா தடுப்புப் பணியில் ஏற்பட்டுள்ள பின்னடைவு குறித்து பேசினேன். இது குறித்து பிரதமர் மோடியிடம் கூறும்படி அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் அரசியல் ரீதியாக பேசவில்லை. அரசாங்கத்தை கலைப்பது தொடர்பாக பேசவில்லை. தற்போது கொரோனாவை எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது.

அமித்ஷாவுடன் ஃபட்னாவிஸ் திடீர் சந்திப்பு! –

மகாராஷ்டிராவில் ஆபரேஷன் லோட்டஸ் என்று எதுவும் இல்லை. தற்போதைய கூட்டணி ஆட்சிக்குள் குழப்பம் உள்ளது, அதுவாகவே உடையும்” என்றார்.
கரும்பு ஆலை பற்றி எதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச வேண்டும், மகாராஷ்டிரா மாநிலம் கொரோனா ஒழிப்பு பணிக்கு போதிய நிதி இல்லாமல் அவதியுறும் நிலையில் அது பற்றி ஏன் ஃபட்னாவிஸ் பேசவில்லை, மத்திய அரசிடம் பேசி மகாராஷ்டிராவுக்கு நிதி பெற்றுத் தந்திருக்கலாமே என்று காங்கிரஸ், சிவசேனா கட்சியினர் கேள்வி எழுப்புகின்றனர்.