காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை… பரூக் அப்துல்லா வேண்டுகோள்

காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை… பரூக் அப்துல்லா வேண்டுகோள்

ஜம்மு அண்டு காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு பரூக் அப்துல்லா கோரிக்கை விடுத்துள்ளார்.

தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான பரூக் அப்துல்லா மக்களவையில் ஜீரோ நேரத்தில் பேசியதாவது: என்னை காவலிலிருந்து விடுதலை செய்ய கோரிக்கை விடுத்த உறுப்பினர்களுக்கு நன்றி. ஜம்மு அண்டு காஷ்மீரில் வளர்ச்சி இல்லை. 4ஜி நெட்வொர்க் இல்லாததால் மக்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். எல்லாமே இணையத்தில் உள்ளதால் குழந்தைகளும் தங்களது படிப்புகளில் இடர்பாடுகளை எதிர்கொள்கின்றனர்.

காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை… பரூக் அப்துல்லா வேண்டுகோள்
பரூக் அப்துல்லா

எல்லை மோதல்கள் அதிகரித்து வருகிறது, மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். பேச்சுவார்த்தையை தவிர வேறு தீர்வு இல்லை. இந்த பிராந்தியத்தில் அமைதியை மீட்டெடுப்பதற்காக அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதை தவிர வேறு மாற்று இல்லை. லடாக் எல்லை நிலவரம் தொடர்பாக சீனாவுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காஷ்மீரில் அமைதியை மீட்டெடுக்க பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை… பரூக் அப்துல்லா வேண்டுகோள்
4ஜி நெட்வொர்க்

சோபியனின் கொல்லப்பட்ட 3 பேரையும் தவறுதலாக கொன்று விட்டதாக ராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது. இந்த வழக்கில் அரசு பெரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் பெயரை குறிப்பிடாமல் அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் பரூக் அப்துல்லா கூறியது குறிப்பிடத்தக்கது.