“மோடி ஜி, யோகி ஜி கவனமா கேட்டுக்கோங்க…அவமானப்படுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”

“மோடி ஜி, யோகி ஜி கவனமா கேட்டுக்கோங்க…அவமானப்படுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”

விவசாயிகளை அவமானப்படுத்தினாலும் அவர்கள் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள் என சுவராஜ் அபியான் கட்சியைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் பேசியிருக்கிறார்.

“மோடி ஜி, யோகி ஜி கவனமா கேட்டுக்கோங்க…அவமானப்படுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”

டெல்லி விவசாய பேரணி மடைமாற்றப்பட்டு வன்முறையாக வெடித்தது. இந்த வன்முறையைத் தொடர்ந்து இரண்டு சிரிய விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தன. அப்போதே விவசாயிகளின் போராட்டத்தின் அஸ்தமனம் தொடங்கிவிட்டதாக தகவல்கள் காற்றில் பரவின. அவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக மிகப் பெரிய தேசிய விவசாய சங்கமான பாரத் கிசான் போராட்டம் தொடரும்; பின்வாங்க மாட்டோம் என சூளுரைத்தது.

“மோடி ஜி, யோகி ஜி கவனமா கேட்டுக்கோங்க…அவமானப்படுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”

இதையடுத்து டெல்லி-உத்தரப் பிரதேச எல்லையான காஸிப்பூரிலிருந்து விவசாயிகளை அப்புறப்படுத்தும் வேலையில் காவல் துறையினரை யோகி அரசு களமிறக்கியது. ஆனால், பாரத் கிசான் தலைவர் ராகேஷ் தியாத்தின் கண்ணீர் பேட்டியால் அரசின் திட்டம் தவிடுபொடியானது. யோகி கணக்கு போட்டதிற்கு முற்றிலும் மாறாக ஏராளமான விவசாயிகள் காஸிப்பூரை நோக்கி வந்தனர்.

“மோடி ஜி, யோகி ஜி கவனமா கேட்டுக்கோங்க…அவமானப்படுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”

இச்சூழலில், அங்குள்ள உள்ளூர் மக்களைக் கொண்டு விவசாயிகளை விரட்டியடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். அந்த உள்ளூர் மக்கள் பாஜகவின் துணை அமைப்புகளைச் சார்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. டிங்ரி, சிங்கு, காஸிப்பூர் ஆகிய எல்லைகளிலிருந்து திரும்பிச் செல்ல மறுத்த விவசாயிகளின் மீது காவல் துறையினரும், அந்த ‘உள்ளூர்’ ஆட்களும் தடியடி நடத்தினர். இருப்பினும் விவசாயிகள் பின்வாங்காமல் போராட்டத்தைத் தொடர்ந்துவருகின்றனர்.

“மோடி ஜி, யோகி ஜி கவனமா கேட்டுக்கோங்க…அவமானப்படுத்தினாலும் நாங்கள் பின்வாங்க மாட்டோம்”

இந்நிலையில், காஸிப்பூரில் சுவராஜ் அபியான் கட்சியைச் சேர்ந்த யோகேந்திர யாதவ் உணர்ச்சி பொங்க பேசியுள்ளார். விவசாயிகள் கூட்டத்தின் மத்தியில் பேசிய அவர், “பிரதமர் மோடி, முதலமைச்சர் யோகி உள்பட அனைவரும் நன்றாகக் கேட்டுக்கொள்ளுங்கள். விவசாயிகளை நீங்கள் அவமானப்படுத்தினாலும் சரி, அவர்களைப் பற்றி அவதூறு பரப்பினாலும் சரி இந்தப் போராட்டத்திலிருந்து பின்வாங்க மாட்டார்கள். அது நீங்கள் சட்டங்களைத் திரும்பப்பெறும் வரையில் நடக்காது” என்றார்.