‘கருகும் பயிர்கள்’ தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காக்கும் அவல நிலை; வேதனையில் விவசாயிகள்!

‘கருகும் பயிர்கள்’ தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காக்கும் அவல நிலை; வேதனையில் விவசாயிகள்!

கோவில்பட்டி அருகே பாசனத்துக்கு நீர் இல்லாமல் கருகும் பயிர்களை, விவசாயிகள் விலைக்கு தண்ணீரை வாங்கி பாதுகாக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் உள்ள மானவாரி நிலங்களில் மழையை நம்பியே விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. அப்பகுதியில் இருக்கும் நீர்நிலைகளில் பயிர்களுக்காக நீரை எடுக்க அனுமதி வழங்கப்படவில்லையாம். அதனால் மழையை மட்டுமே எதிர்பார்த்து விவசாயிகள் ஆண்டு தோறும் உளுந்து, பாசி, கம்பு, மக்கச்சோளம் போன்றவற்றை பயிரிட்டு வந்தனர். அதே போல இந்த ஆண்டும் அண்மையில் பெய்த மழையை நம்பி ஏக்கருக்கு ரூ.10 முதல் 15 ஆயிரம் செலவில் நிலத்தை உழுது விதை போட்டனர்.

‘கருகும் பயிர்கள்’ தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காக்கும் அவல நிலை; வேதனையில் விவசாயிகள்!

ஆனால் தற்போது மழை பெய்யாததாலும் நீர் நிலைகளில் இருந்து தண்ணீர் எடுத்து நிலங்களுக்கு பாய்ச்ச அனுமதிக்கப்படாததாலும் பயிர்கள் தற்போது கருகும் நிலையில் இருக்கிறது. அதனைக் கண்டு வேதனை அடைந்த விவசாயிகள், விலைக்கு ட்ரம்களில் நீரை வாங்கி செடிக்கு ஊற்றும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல், வெயிலின் தாக்கம் அதிகரிப்பதால் 2 நாட்களில் மழை பெய்யாவிடில் பயிர்கள் கருகிப் போகி, போட்ட முதலீடு எல்லாம் நாசமாகிவிடும் என வேதனையில் இருக்கின்றனர்.

‘கருகும் பயிர்கள்’ தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காக்கும் அவல நிலை; வேதனையில் விவசாயிகள்!

இது குறித்து பேசிய அப்பகுதி விவசாயிகள், இன்னும் 2 நாட்களில் மழை பெய்யாவிட்டால் பயிர்கள் கருகி விடும் என்றும் அந்த பயிர்களுக்கு இதுவரை செலவு செய்த ரூ.50 ஆயிரம் பணத்தை வீணாகிவிடும் என்றும் வேதனையுடன் தெரிவித்துள்னர். மேலும், கிராம மக்களும் நீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிப்பதால் கடுமையான சூழலுக்கு தாங்கள் தள்ளப்பட்டு இருப்பதாகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர்.