வேளாண் சட்டங்கள்; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெடிக்கும் போராட்டம்!

 

வேளாண் சட்டங்கள்; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெடிக்கும் போராட்டம்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்த வேளாண் மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இந்த மசோதாக்கள் சட்டமானால், விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை இல்லாமல் போய்விடும் என்பதால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுவர் என்றும் விவசாயத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள் கையகப்படுத்தும் என அச்சம் தெரிவித்தன.

வேளாண் சட்டங்கள்; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெடிக்கும் போராட்டம்!

இருப்பினும் பெரும்பான்மையான எம்.பிக்களின் ஆதரவை கொண்ட பாஜக அரசு, அந்த மசோதாக்களை மக்களவையில் நிறைவேற்றியது. இதனைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன. ஆனால் இந்த சட்டங்கள் விவசாயிகளை எந்த வகையிலும் பாதிக்காது என்றும் மாறாக இது விவசாயிகள் நலனை மேம்படுத்தும் என்றும் தமிழக அரசு இதற்கு ஆதரவு அளித்து வருகிறது.

வேளாண் சட்டங்கள்; தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெடிக்கும் போராட்டம்!

இந்த நிலையில் திருச்சி, தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் சங்கம் சார்பில் சட்ட நகலை எரித்து, கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்று வருகிறது. அதே போல வேளாண் சட்ட நகல்களை கிழித்து எஸ்டிபிஐ கட்சி சார்பில் திருச்சி, ஆரணி மற்றும் சேலத்தில் போராட்டம் நடந்தது. மேலும், கும்பகோணத்தில் விநாயகர் கோவிலில் தேங்காய் உடைத்து நாற்று, கருப்புக்கொடிகளை ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.