வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, திருப்பத்தூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் விவசாய சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு கண்டனம் தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். அத்துடன், உணவு பொருட்களின்
விலையேற்றத்திற்கு காரணமான அத்தியவசிய பொருட்கள் திருத்தச்சட்டம், விவசாய விளை பொருட்களை அரசு கொள்முதல் செய்வதை தவிர்க்கும், வேளாண் விளைபொருட்கள் வணிக ஊக்குவிப்பு சட்டம் மற்றும் ஒப்பந்த விவசாயம் மூலம் கார்ப்பரேட்டுக்கு விவசாயிகளை அடிமையாக்கும் வேளாண் ஒப்பந்த பாதுகாப்பு சட்டம் ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்,.

வேளாண் சட்டங்களை கண்டித்து விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில்ர 20-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், மின்சார திருத்த சட்டம் 2020-ஐ திரும்ப பெற வலியுறுத்தியும், தென்பெண்ணை – பாலாறு இணைப்பு திட்டத்தை உடனே துவங்க வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர்.