டெல்லி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, விவசாய அமைப்பினர் அஞ்சலி

 

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, விவசாய அமைப்பினர்  அஞ்சலி

டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு, தமிழகத்தின் பல்வேறு இடங்களில் விவசாய சங்கத்தினர் அஞ்சலி செலுத்தினர். மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் 25 நாட்களை கடந்து தொடர் பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடும் குளிர் மற்றும் மழையினை பொருட்படுத்தாமல் நடைபெறும் இந்த போரட்டத்தில் பங்கேற்ற 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு சார்பில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அஞ்சலி செலுத்தப்பபட்டது.

டெல்லி போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு, விவசாய அமைப்பினர்  அஞ்சலி

திருச்சி மிளகு பாறையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், டெல்லி போராட்டத்தில் உயிர் நீத்தவர்களின் உருவ படங்களுக்கு விவசாயிகள் அமைப்பினர் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் அஞ்சலி செலுத்தினர். அப்போது, விவசாயிகள் போராட்டத்தை அரசு முடக்க நினைத்தாலும், வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் வரை தமிழகத்திலும் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்று தெரிவித்தனர். இதேபோல், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில், டெல்லி போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.