போடிநாயக்கனூர் மற்றும் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடத்த பிரதமர் மோடிக்கு வியாபாரிகள் கோரிக்கை

 

போடிநாயக்கனூர் மற்றும் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடத்த பிரதமர் மோடிக்கு வியாபாரிகள் கோரிக்கை

போடிநாயக்கனூர்: போடிநாயக்கனூர் மற்றும் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடத்த பிரதமர் மோடிக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேனி மாவட்டம் போடிநாயக்கனூரிலும் மற்றும் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள புத்தடியிலும் ஏலக்காய் ஏல மையங்கள் உள்ளன. இவ்விரு இடங்களில் விவசாயிகளே வியாபாரிகளாக மாறி தாங்கள் விளைவித்த ஏலக்காய்களை ஏலம் நடத்தி விற்பனை செய்வார்கள். ஒவ்வொரு வாரமும் 6 நாட்கள் இந்த ஏலம் நடைபெறும். இந்த ஏலத்தில் பங்கேற்று ஏலக்காய்களை வாங்க டெல்லி, மும்பை போன்ற மாநிலங்களில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

போடிநாயக்கனூர் மற்றும் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடத்த பிரதமர் மோடிக்கு வியாபாரிகள் கோரிக்கை

இந்த ஏலக்காய் ஏல மையம் மூலமாக வாரம்தோறும் 200 முதல் 250 மெட்ரிக் டன் ஏலக்காய்கள் விற்பனை ஆகும். ஆனால் கொரோனா பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் இந்த இடங்களில் ஏலக்காய் ஏலம் நடைபெறவில்லை. இதனால் சுமார் 16 ஆயிரம் மெட்ரிக் டன் ஏலக்காய்கள் விற்பனை ஆகாமல் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெருத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர்.

பொதுவாக ஆண்டுதோறும் மே, ஜூன் மாதங்கள் ஏலக்காய்களுக்கான சீசன் காலமாகும். இந்த காலகட்டத்தில் ஏலச் செடிகளை பராமரிப்பது, அவற்றுக்கு உரம் வைக்கும் பணிகள் ஆகியவை நடைபெறும். அதனால் போடிநாயக்கனூர் மற்றும் புத்தடியில் ஏலக்காய் ஏலம் நடத்த பிரதமர் மோடிக்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விஷயம் தொடர்பாக கேரளா கார்டமம் குரோவர்ஸ் யூனியன் தலைவர் உதயகுமார் பிரதமர் மோடிக்கு கோரிக்கை மனுவை இ-மெயில்  மூலமாக அனுப்பியுள்ளார்.