திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது…

 

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது…

திருப்பூர்

திருப்பூர் மாவட்டத்தில் 11 மாதங்களுக்கு பிறகு இன்று நடைபெற்ற விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் ஏராளமான விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கு காரணமாக, மாதந்தோறும் ஆட்சியர்கள் தலைமையில் நடைபெறும் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டு இருந்தது. இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால், 11 மாதங்களுக்கு பின் இன்று தமிழகம் முழுவதும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்… ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது…

இதன்படி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று ஆட்சியர் விஜய காத்திகேயன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வந்திருந்த 100-க்கும் மேற்பட்ட விவசாய சங்க நிர்வாகிகள் ஆட்சியரிடம், தங்களுடைய கோரிக்கைகளை எடுத்துரைத்தனர்.

இந்த கூட்டத்தில், விவசாயிகளிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 32 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஆட்சியர் விஜய கார்த்திகேயன் உத்தரவிட்டார்.