திடீர் திருப்பம்… மத்திய அமைச்சரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரகாண்ட் விவசாயிகள்

 

திடீர் திருப்பம்… மத்திய அமைச்சரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரகாண்ட் விவசாயிகள்

ஹரியானா விவசாயிகளை தொடர்ந்து உத்தரகாண்ட் விவசாயிகள் மத்திய வேளாண் துறை அமைச்சரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை நீக்கியே தீர வேண்டும் என்று டெல்லியின் பல எல்லைகளில் சுமார் 3 வாரங்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்பட தொடங்கியுள்ளன. புதிய வேளாண் சட்டங்களுக்கு ஒரு தரப்பு விவசாயிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

திடீர் திருப்பம்… மத்திய அமைச்சரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரகாண்ட் விவசாயிகள்
நரேந்திர சிங் தோமர்

கடந்தி சில தினங்களுக்கு முன், 116 ஹரியானா மாநில வேளாண் உற்பத்தி அமைப்புகளின் கூட்டமைப்பான ஹர் கிஸான், புதிய வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதியது. இந்த சூழ்நிலையில் நேற்று உத்தரகாண்ட் விவசாயிகள் மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமரை சந்தித்து பேசினர். அப்போது மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவை தெரிவித்தனர்.

திடீர் திருப்பம்… மத்திய அமைச்சரை சந்தித்து வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த உத்தரகாண்ட் விவசாயிகள்
கைலாஷ் சவுத்ரி

இது தொடர்பாக மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறுகையில், உத்தரகாண்ட் விவசாயிகள் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக என்னை சந்தித்தனர். சட்டங்களை புரிந்துகொண்டு, தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்திய, அதை ஆதரித்த விவசாயிகளுக்கு நான் நன்றி கூற விரும்புகிறேன் என் தெரிவித்தார். மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் கைலாஷ் சவுத்ரி கூறுகையில், வேளாண் சட்டங்களில் திருத்தங்கள் செய்ய மத்திய அரசு தயராக உள்ளது. அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு விவசாயிகள் நேர்மறையான கண்ணோட்டத்துடன் வருவார்கள் என்று நம்புகிறேன். விவசாயிகள் இரண்டு அடி எடுத்து வைத்தால், அரசாங்கமும் 2 அடி முன்னோல் வரும். அப்போதுதான் ஒரு தீர்வை எட்ட முடியும். காங்கிரசும், எதிர்க்கட்சிகளும் விவசாயிகளின் பெயரில் அரசியல் மட்டுமே செய்கின்றன என்று தெரிவித்தார்.