மார்ச் 26ம் தேதியன்று பாரத் பந்த்… விவசாயி சங்கங்கள் அழைப்பு

 

மார்ச் 26ம் தேதியன்று பாரத் பந்த்… விவசாயி சங்கங்கள் அழைப்பு

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் 4 மாதங்கள் எட்டுவதை குறிக்கும் வகையில், மார்ச் 26ம் தேதி பாரத் பந்த் (வேலை நிறுத்தம்) நடத்த விவசாயி சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

மத்திய அரசு வேளாண் துறையில் சீர்த்திருத்தங்கள் செய்யும் நோக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் 3 புதிய வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்கள் வேளாண் உற்பத்தியை அதிகரிக்க உதவுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும், விவசாயிகள் எங்கு வேண்டுமானாலும் தங்களது விளைபொருட்களை விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு கூறுகிறது. ஆனால் இந்த வேளாண் சட்டங்களுக்கு விவசாயி சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

மார்ச் 26ம் தேதியன்று பாரத் பந்த்… விவசாயி சங்கங்கள் அழைப்பு
விவசாயிகள் போராட்டம் (கோப்புப்படம்)

வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்த 2020 நவம்பர் கடைசி வாரத்தில் டெல்லியின் பல எல்லைகளில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சட்டங்களை திரும்ப பெறக்கோரியும் கடந்த 100 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சூழ்நிலையில், 40 விவசாயிகள் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மன்றமான சன்யுக்ட் கிசான மோர்ச்சா, பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதற்கு, எரிபொருள் விலை உயர்வை கண்டித்து, விவசாய அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்கள் மார்ச் 15ம் தேதியன்று போராட்டத்தில் ஈடுபடும் என்று அறிவித்துள்ளது.

மார்ச் 26ம் தேதியன்று பாரத் பந்த்… விவசாயி சங்கங்கள் அழைப்பு
பாரத் பந்த்

மேலும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் வரும் 26ம் தேதியன்று 4 மாதத்தை எட்டுகிறது. இதனை குறிக்கும் வகையில் அன்றைய தினம் பாரத் பந்த் நடத்த விவசாயிகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அன்றைய தினம் காலை முதல் மாலை வரை அமைதியான வழியில் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என்று விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்துள்ளன.