கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை; கந்துவட்டி கொடுமையா? என விசாரணை

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை; கந்துவட்டி கொடுமையா? என விசாரணை

வாடிப்பட்டி அருகே வாங்கிய ஒரு லட்சம் கடனுக்கு 2 லட்சம் ரூபாய் வட்டிகட்டியும் கூடுதல் வட்டி கேட்டதால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை; கந்துவட்டி கொடுமையா? என விசாரணை

. மதுரை மாவட்டம் குட்லாடம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா.
இவர் விவசாய பணிகளுக்காக அருகிலுள்ளவரிடம் 1 லட்சம் ரூபாய் கடன் வாங்கி, விராலிபட்டியை சேர்ந்த நண்பர் சின்னன் என்பவருக்கு கொடுத்துள்ளார். ஆனால், கடனை திருப்பி செலுத்தாமல் சின்னன் கடந்த 7 வருடங்களாக ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது. இதனால் தான் வாங்கிய ஒரு லட்சம் ரூபாய் கடனுக்கு, வட்டியாக மட்டும் 2 லட்ச ரூபாய் திருப்பி செலுத்தியுள்ளார். மேலும் கூடுதல் வட்டி கேட்டு பணம் கொடுத்தவர்கள் தொந்தரவு

ராஜா, சின்னனிடம் கடனை திருப்பி கேட்டுளளார். அப்போது சின்னன் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை; கந்துவட்டி கொடுமையா? என விசாரணை
rep image

இதனால் மனமுடைந்த ராஜா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்

. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய வாடிப்பட்டி போலீசார், தற்கொலைக்கு கந்து வட்டிகேட்டு மிரட்டியது காரணமாக அல்லது வேறு காரணம் உள்ளதா? என விசாரித்து வருகின்றனர்.