Home விளையாட்டு கிரிக்கெட் நடராஜனுக்காக ரசிகர்கள் கோரிக்கை - செவி சாய்க்குமா BCCI

நடராஜனுக்காக ரசிகர்கள் கோரிக்கை – செவி சாய்க்குமா BCCI

இந்தியா – ஆஸ்திரேலியா இரு அணிகளுக்கு இடையேயான தொடர் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருக்கிறது. தொடக்கத்தில் நடந்த ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியாவும், டி20 தொடரில் இந்தியாவும் வென்றது.

நடராஜனுக்காக ரசிகர்கள் கோரிக்கை - செவி சாய்க்குமா BCCI

இப்போது நடைபெற்றுவரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியை ஆஸ்திரேலியாவும், இரண்டாம் டெஸ்ட் போட்டியை இந்தியாவும் வென்றது. எனவே போட்டியில் நிலை 1:1 எனும் சமநிலையில் உள்ளது. எனவே, மூன்றாம் டெஸ்ட் போட்டியில் வெல்லும் அணி, நான்காம் டெஸ்ட்டை டிராவாக்கினால் கூட தொடரைக் கைப்பற்றிவிடும் சூழல். அதனால் இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

நடராஜனுக்காக ரசிகர்கள் கோரிக்கை - செவி சாய்க்குமா BCCI

இந்தத் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் நடராஜன் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. நெட் பவுலராக அழைத்துச் செல்லப்பட்ட நடராஜன் எதிர்பாராத விதமாக அணிக்குள் சேர்க்கப்பட்டார். வருண் சக்கரவர்த்திக்கு காயம் குணமடையாததால் அவர் இந்திய அணியில் இடம்பெற்றார்.

நடராஜன் ஒருநாள் அணியில் இருந்தாலும் முதல் இரு போட்டிகளில் ஆட விடவில்லை. மூன்றாம் போட்டியில் களமிறங்கிய நடராஜன் 3 முக்கிய விக்கெட்டுகளைத் தூக்கினார். அதற்கு அடுத்த டி20 போட்டிகளிலும் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார் நடராஜன்.

இரண்டாம் டெஸ்ட் போட்டியின்போது பவுலர் உமேஷ் யாதவ்க்கு காயம்பட்டதால் போட்டியிலிருந்து விலகினார். அந்தக் காயம் உடனடியாக சரி ஆகாத நிலையில் அவர் தொடரிலிருந்தே விலகுகிறார். அதனால், தமிழகத்தின் நடராஜன் மூன்றாம் டெஸ்ட் அணியில் இடம்பிடிக்கிறார். அதற்கு முக்கியமான காரணம், நடராஜன் இடதுகை பவுலர் என்பதும்தான்.

நடராஜனுக்காக ரசிகர்கள் கோரிக்கை - செவி சாய்க்குமா BCCI

நடராஜன் பலரின் விருப்பத்திற்கு ஏற்ப டெஸ்ட் அணிக்குள் வந்துவிட்டார். ஆனால், நாளை மறுநாள் தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் 11 பேர் கொண்ட அணியில் இடம்பிடிப்பாரா என்பது சந்தேகமாக இருக்கிறது. ஆடும் 11 பேரில் நடராஜனும் இடம்பெற வேண்டும் என நினைக்கும் ரசிகர்கள் நூதனமாக ஒரு வழி மூலம் BCCI க்கு கோரிக்கை வைக்கின்றனர்.

BCCI யில் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் போட்டியின் அப்டேட்டுகள் வெளியிடுவார்கள். அப்படி இந்திய அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ள படங்களை வெளியிட்டிருந்தார். அதன் கமெண்ட் பகுதியில் நடராஜனின் ரசிகர்கள் ‘ஆடும் 11 அணியில் நடராஜனைச் சேருங்கள்’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு ரசிகர் ’If BCCI Team Management consider T Natarajan in Test playing-XI without much First Class experience. He will be next Naseem Shah’ என்று பதிவிட்டுள்ளார்.

இன்னொரு ரசிகர் நடராஜனின் விக்கெட் ஹிஸ்டரியை ஸ்கிரின் ஷார் எடுத்துப்போட்டு அவசியம் டீமில் சேருங்கள் என்று கேட்டுள்ளார். இது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, பல மாநிலங்களைச் சேர்ந்த ரசிகர்களும் இந்தக் கோரிக்கையை முன்வைத்து வருகின்றன.

ரசிகர்களின் கோரிக்கையை BCCI ஏற்குமா… மறுக்குமா என்பது அநேகமாக நாளை இரவு தெரிந்துவிடும். நடராஜன் ஆடும் 11 பேர் அணிக்குள் இடம்பெற்றுவிட்டால் மீண்டும் வைரலாகி விடுவார் நடராஜன்.

நடராஜனுக்காக ரசிகர்கள் கோரிக்கை - செவி சாய்க்குமா BCCI
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

2 முக்கிய விக்கெட்டுகள்… திணறும் இந்தியா… பதறும் ரசிகர்கள் – மழையால் மீண்டும் சோதனை!

சமீப ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட் மீதான மக்களின் ஆர்வம் குறைந்துகொண்டே போவதால், டெஸ்ட் போட்டிகளை ஊக்குவிக்கும் விதமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை ஐசிசி அறிமுகப்படுத்தியது. இந்தத் தொடர் 2019ஆம்...

ஜூன் 23-ம் தேதிக்குள் பதிவு செய்ய சூர்யா வேண்டுகோள்! ஒரே தேர்வு முறைக்கு முடிவுகட்ட அழைப்பு

அரசுப்பள்ளியில் படித்து உயர் கல்வி பெறுகிற மாணவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ’கல்வியே ஆயுதம்’. ஏழைகளுக்கு ஒரு விதமான கல்வி வாய்ப்பும் பணம் படைத்தவர்கள் ஒரு விதமான கல்வி வாய்ப்பும் இருக்கிற...

“இவர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்… 5ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்” – அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை!

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள வணிகர்களுடன் கலந்தாய்வு கூட்டம் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வணிகவரித் துறை அமைச்சர் பி.மூர்த்தி கலந்துகொண்டார்.

’’இந்திய அரசியலின் நம்பிக்கையூட்டும் இளவல்’’

தனக்கென்று வாழாத தலைவன், ஏழை எளிய மக்களின் தலைமகன். தனக்கும், தனது குடும்பத்திற்கும் எதிராக பரப்பப்படும் வெறுப்பை, கேலிகளை, பொய்களை புன்னகையால் எதிர்கொள்ளும் பண்பாளன் அன்பும்,எளிமையும்,நேர்மையும் அவர் அடையாளம். இந்த...
- Advertisment -
TopTamilNews