அர்ஜுன மூர்த்தி இடத்தில் பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்!

 

அர்ஜுன மூர்த்தி இடத்தில் பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்!

தொழிலதிபர் ரா.அர்ஜூன மூர்த்தி, மின்னணு பரிவர்த்தனையின் புதிய அலையை ஏற்படுத்தியவர். பாஜகவின் தமிழ்மாநில அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தார். அண்மையில் நடந்த பாஜகவின் வேல் யாத்திரையில் பங்கேற்று கைதானார். இந்நிலையில் இன்று ரஜினிகாந்த் தான் தொடங்கப்போகும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன மூர்த்தி என்று அறிவித்ததும் பரபரப்பு எழுந்தது. பாஜகவில் நிர்வாகியாக இருக்கும் ஒருவர் எப்படி ரஜினி கட்சிக்கும் நிர்வாகியாக இருக்கிறார். அப்படியானால், ரஜினிகாந்தை பாஜக இயக்குகிறதா என்ற கேள்வி எழுந்தது. இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டுக்கொண்டிருந்த நிலையில், பாஜகவின் அறிவுசார் பிரிவு உள்ளிட்ட அடிப்படை உறுப்பினர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அர்ஜூன மூர்த்தி நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்று பாஜக அறிவித்திருக்கிறது.

அர்ஜுன மூர்த்தி இடத்தில் பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமனம்!

இந்நிலையில் தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக பிரபல ஜோதிடர் ஷெல்வீ நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவு தலைவராக இருந்த அர்ஜுன மூர்த்தி ரஜினி தொடங்கவிருக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டதால் பாஜகவிலிருந்து ராஜினாமா செய்தார்