பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த ஏ.பி.வி.பி தலைவர்… நடவடிக்கை எடுக்காத காவல் துறை! – கனிமொழி வலியுறுத்தல்

 

பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த ஏ.பி.வி.பி தலைவர்… நடவடிக்கை எடுக்காத காவல் துறை! – கனிமொழி வலியுறுத்தல்

சென்னை நங்கநல்லூரில் 62 பெண் ஒருவரின் வீட்டின் கதவில் சிறுநீர் கழித்து, ஆபாச செயல்களில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி தலைவர் மீது புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காதது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது என்று கனிமொழி கருத்து தெரிவித்துள்ளார்.

பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த ஏ.பி.வி.பி தலைவர்… நடவடிக்கை எடுக்காத காவல் துறை! – கனிமொழி வலியுறுத்தல்சென்னை நங்கநல்லூரில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் இடம் தொடர்பான பிரச்னை காரணமாக ஏ.பி.வி.பி தேசிய தலைவர் சுப்பையாவுக்கும் 62 வயதான பெண்மணியின் குடும்பத்துக்கும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஏ.பி.வி.பி தேசியத் தலைவர் சுப்பையா அந்த பெண்ணின் வீட்டு முன்பு, கதவில் சிறுநீர் கழித்துள்ளார். மேலும், வீட்டின் முன்பு சுய இன்பம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான சிசிடிவி கேமரா காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

http://


இது தொடர்பாக அந்த பெண்மணி போலீசில் புகார் செய்திருந்தார். ஆனால் இதுவரை போலீஸ் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது குறித்து தி.மு.க எம்.பி கனிமொழி இன்று வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், “பாஜக மாணவர் அமைப்பான ஏபிவிபியின் தேசிய தலைவர் 62 வயதான ஒரு பெண் வீட்டில்

பெண்ணின் வீட்டுக் கதவில் சிறுநீர் கழித்த ஏ.பி.வி.பி தலைவர்… நடவடிக்கை எடுக்காத காவல் துறை! – கனிமொழி வலியுறுத்தல்

அருவருப்பாக நடந்து கொண்டது அதிர்ச்சி அளிக்கிறது. 11 ஜூலை அன்று புகாரளித்தும், இன்று வரை காவல் துறை நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மேலும் அதிர்ச்சியளிக்கிறது.வலதுசாரி அமைப்புகளை சேர்ந்தவர்கள் மீது புகார் வந்தால் காவல்துறை கண்டும் காணாமல் இருப்பது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.