குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்கலாம் : 144 தடை உத்தரவு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்கலாம் : 144 தடை உத்தரவு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

சட்டப்பேரவை வாக்குப்பதிவை 144 தடை உத்தரவு பாதிக்காது என புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் தெரிவித்துள்ளார்.

தமிழகம், புதுச்சேரி மற்றும் கேரளாவில் நாளை ஒரே கட்டமாக சட்டமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. புதுச்சேரியில் தேர்தலை முன்னிட்டு கடந்த மார்ச் 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க், ஏப்ரல் 4 ஆம் தேதி இரவு 7 மணி முதல், 7-ஆம் தேதி காலை 7 மணி வரை 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுவதாக அறிவித்தார் . இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் கண்டனம் தெரிவித்ததுடன் 144 தடை உத்தரவை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்கலாம் : 144 தடை உத்தரவு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் தேர்தலை முன்னிட்டு 144 தடை பிறப்பித்து அதற்கான காரணம் என்ன என்பது குறித்து தேர்தல் அதிகாரி விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறியது . இல்லையென்றால் 144 தடை உத்தரவை நீதிமன்றம் நீக்கும் என்றும் நீதிபதிகள் அதிரடியாக கூறினர்.

குடும்பம் குடும்பமாக சென்று வாக்களிக்கலாம் : 144 தடை உத்தரவு குறித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!

இந்நிலையில் புதுச்சேரியில் குடும்பம் குடும்பமாகவும், நண்பர்கள் எல்லாம் சேர்ந்து சென்றும் வாக்களிக்க தடையில்லை என்று புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் கூறியுள்ளார். புதுச்சேரியில் அமல்படுத்தப்பட்டுள்ள 144 தடை உத்தரவு வாக்குப்பதிவை பாதிக்காது என்று வாக்கு பதிவின்போது சட்டவிரோதமாக ஆட்கள் கூடுவதை தடுக்க 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது என்றும் அறிவித்துள்ளார். 114 தடை உத்தரவு குறித்து ஐகோர்ட் கேள்வி எழுப்பிய நிலையில் மாவட்ட ஆட்சியர் விளக்கமளித்துள்ளார்.