‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டுகள் போட்டனர்’ : டி.ஆர். பரபரப்பு புகார்!

‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டுகள் போட்டனர்’ : டி.ஆர். பரபரப்பு புகார்!

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக இயக்குநர் டி.ராஜேந்தர் குற்றம் சாட்டியுள்ளார்.

‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டுகள் போட்டனர்’ : டி.ஆர். பரபரப்பு புகார்!

தயாரிப்பாளரும், இயக்குனரும் தயாரிப்பாளருமான டி.ராஜேந்திரன் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தனி அலுவலர் மஞ்சுளாவுக்கு எழுதிய கடிதத்தில், “நான் நடைபெற்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்டேன்.

‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டுகள் போட்டனர்’ : டி.ஆர். பரபரப்பு புகார்!

இந்த தேர்தலில் வாக்களிக்கும் தகுதியுள்ள ஆயிரத்து 53 உறுப்பினர்களில், ஆயிரத்து 50 உறுப்பினர்கள் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டது. வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 400க்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க வரவில்லை என்றே தெரியவருகிறது. மார்ச் மாதத்தில் இருந்து வெளிவந்த அறிக்கையில் 300க்கும் அதிகமான உறுப்பினர்கள் ஆண்டு சந்தாவை கட்டவில்லை எனவும் கட்ட தவறினால் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

‘தயாரிப்பாளர் சங்க தேர்தலில் கள்ள ஓட்டுகள் போட்டனர்’ : டி.ஆர். பரபரப்பு புகார்!

இந்த சூழலில் குறிப்பிட்ட சில 200க்கும் அதிகமான அடையாளம் தெரியாத தொடர்பு கொள்ள முடியாத உறுப்பினர்களுக்கு மொத்தமாக ஆண்டு சந்தாவை செலுத்தி அவர்களின் அடையாள அட்டையை பெற்று அதன் மூலம் கள்ள ஓட்டுகள் போட்டி இருப்பதாக தெரிய வருகிறது என்று புகார் தெரிவித்துள்ளார்.