தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி… பெண் பலியான சோகம்…

 

தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி… பெண் பலியான சோகம்…

பெரம்பலூர்

பெரம்பலூர் தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் அடுத்த வெங்கடேசபுரத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு தம்பதியினர் என கூறி ஆண் மற்றும் பெண் இருவர் தங்கியுள்ளார். அவர்கள் அறையில் தங்கியிருந்து பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்றுவந்துள்ளனர். இன்று காலை நீண்டநேரம் ஆக அறை திறக்காததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது இருவரும் விஷம் அருந்திய நிலையில் மயங்கி கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி… பெண் பலியான சோகம்…

போலீசார் விரைந்து சென்று பார்த்தபோது பெண் உயிரிழந்ததும், ஆண் உயிருடன் இருப்பதும் தெரியவந்தது. உடனடியாக அவரை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த போலீசார், பெண்ணின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அதில் அந்த நபர் சென்னை கே.கே.நகரை சேர்ந்த மகேந்திரன்(45) என்பதும், அவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளதும் தெரியவந்தது. மேலும், உயிரிழந்த பெண் திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த பூங்கொடி என்பதும், கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்ற அவர், சென்னையில் ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.

தனியார் விடுதியில் கள்ளக்காதல் ஜோடி விஷமருந்தி தற்கொலை முயற்சி… பெண் பலியான சோகம்…

மேலும் பணி நிமித்தமாக ஓட்டலுக்கு சென்றபோது மகேந்திரனுடன், பூங்கொடிக்கு பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், பொங்கல் விடுமுறைக்காக வீட்டிற்கு வந்த பூங்கொடியை, அவர் பெரம்பலூரில் தங்கவைத்து ஊர் சுற்றி திரிந்துள்ளார். இந்த விவகாரம் தெரிந்து குடும்பத்தினர் கண்டித்ததால் மனமுடைந்து இருவரும் மதுவில் விஷம் கலந்து குடித்தபோது பூங்கொடி உயிரிழந்தது தெரியவந்தது.

இதனிடையே, விஷம் கலந்த மதுவை குடித்த பெண் பலியான நிலையில், மகேந்திரனுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்து உள்ள போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.