போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவியின் தந்தை கைது!

போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவியின் தந்தை கைது!

போலி நீட் சான்றிதழ் விவகாரத்தில் மாணவியின் தந்தை கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவியின் தந்தை கைது!

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வில் கடந்த 7ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த திக்ஷா எனும் மாணவி கலந்துகொண்டார். இவர் நீட் தேர்வில் 27 மதிப்பெண் மட்டுமே பெற்ற நிலையில்  ரித்திகா என்னும் மாணவியின் மதிப்பெண் சான்றிதழை  கொண்டு வந்து 610 மதிப்பெண் பெற்றதாக போலி சான்றிதழ் சமர்ப்பித்துள்ளார். இதுகுறித்து  மருத்துவ கல்வி கூடுதல் இயக்குனர் செல்வராஜன் அளித்த புகாரில் மாணவி மற்றும் அவரது தந்தை மீது பெரியமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவியின் தந்தை கைது!

மருத்துவ கலந்தாய்வின் போது போலி நீட் மதிப்பெண் சான்றிதழ் தந்த விவகாரத்தில் மாணவி மற்றும் தந்தை பாலச்சந்திரனுக்கு 2 முறை சம்மன் அனுப்பப்பட்ட போதும் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லைஇதையடுத்து இருவரின் செல்போன் எண்ணும் அணைக்கப்பட்டு தலைமறைவாகினர். இதனால் இந்த வழக்கு அடுத்தகட்டத்திற்கு நகராமல் தொய்வடைந்தது.

போலி நீட் சான்றிதழ் விவகாரம்: மாணவியின் தந்தை கைது!

இந்நிலையில் போலி நீட் மதிப்பெண் சான்று விவகாரத்தில் மாணவியின் தந்தையான பல் மருத்துவர் பாலச்சந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். தலைமறைவாக இருந்த பாலச்சந்திரனை பெரியமேடு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.