நிறவெறிக்கு முற்றுப்புள்ளி! ஃபேர் அண்ட் லவ்லியில் இனி ஃபேர் கிடையாது!!

ஃபேர் அண்ட் லவ்லி என்ற வார்த்தையில் உள்ள ஃபேர் என்ற வார்த்தையை நீக்குவதாக அதன் தயாரிப்பு நிறுவனமாக ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் அறிவிச்சித்துள்ளாது.

இந்தியாவில் கறுப்பு நிறமே பிரதானமாக இருக்கும் நிலையில் வெளிநாடுகளில் கறுப்பினத்தவர்களை வேற்றுகிரக வாசிகளை போல பார்க்கின்றனர். அதற்கு உதாரணம் ஜார்ஜ் பிளாய்ட் மரணம். இந்த நிறவெறி மரணம் வரை கொண்டு சேர்த்தது. ஜார்ஜ் மரணத்துக்கு நீதிக்கேட்டு அமெரிக்கா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில் ஹிந்துஸ்தான் யூனிலிவரின் ஃபேர் அண்ட் லவ்லி பேர்னஸ் கிரீம் ஆண்டுக்கு 560 மில்லியன் டாலர் வரை விற்பனையாகிறது. Fair, White, Light உள்ளிட்ட வார்த்தைகள் சிவப்பாக இருப்பதே அழகு என பொருள்படும்படி தெரிவதால் ஹிந்துஸ்தான் நிறுவனம் ஃபேர் அண்ட் லவ்லி என்ற வார்த்தையில் உள்ள ஃபேர் என்ற வார்த்தையை நிக்க முடிவு எடுத்துள்ளது. “சிவப்பாக மாறுவதே அழகு” என்ற பொருளில் இது உள்ளதால், இந்த முடிவை எடுத்திருப்பதாக அந்நிறுவனம் விளக்கம் தந்துள்ளது. இந்த பெயரை மாற்றுவதற்காக ஒழுங்குமுறை ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளது. ஆனால் புதிய பெயர் என்ன என்பது தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகலை

Most Popular

`வேறு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு; ஏரியா தகராறு!’- கோவில்பட்டியை பதறவைத்த இளைஞரின் கொலை

வேறொரு பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்ததால் கணவனை மனைவி பிரிந்து சென்றார். தனியாக இருந்த கணவன் ஏரியா தகராறில் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் கோவில்பட்டியில் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பாரதிநகர் கருமாரியம்மன்...

காங்கிரசின் இந்துத்துவா ஆதரவு நிலைப்பாட்டை ராகுல், பிரியங்கா காந்தி பின்பற்றுகிறார்கள்.. பினராயி விஜயன்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிக்கான பூமி பூஜைக்கு காங்கிரசின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் வாழ்த்து தெரிவித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை என செய்தியாளர்களின் சந்திப்பின் போது கேரள...

ராமர் கோயில் பூமி பூஜை.. மக்களின் மத உணர்வுகளை வெளிப்படையாக சுரண்டுவது.. சீதாராம் யெச்சூரி ஆவேசம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி ராமர் கோயில் பூமி பூஜை விழாவை கடுமையாக தாக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் டிவிட்டரில் தொடர்ச்சியான டிவிட்டுகளில், இந்த பூமி பூஜை விழா...

எந்த ராசிக்காரர்களுக்கெல்லாம் தந்தைவழி உறவுகளால் நன்மைகள் வந்து சேரும்!

இன்றைய ராசிபலன்கள் 7.08. 2020 (வெள்ளிக்கிழமை) நல்ல நேரம் காலை 9.15 மணி முதல் 10.15 மணி வரை மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை ராகு காலம் 10.30 மணி முதல் 12 வரையில் எமகண்டம்...