Home உலகம் வன்முறையை கட்டவிழ்த்து விட்ட டிரம்ப்… 2 ஆண்டுகளுக்கு தடா போட்ட பேஸ்புக்!

வன்முறையை கட்டவிழ்த்து விட்ட டிரம்ப்… 2 ஆண்டுகளுக்கு தடா போட்ட பேஸ்புக்!

அமெரிக்க தேர்தல் வரலாற்றில் இதுவரை காணாத மிகப்பெரிய வன்முறை கடந்த ஜனவரி மாதம் அந்நாட்டின் நாடாளுமன்ற கட்டமான கேபிட்டலில் அரங்கேறியது. அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் தலைமையிலான அரசுக்கு அதிகாரத்தை மாற்றும் வேளையில் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்திக் காட்டினர் டிரம்பின் ஆதரவாளர்கள். அதிகார மாற்றத்தில் மிக முக்கியப் பங்கு எலெக்டரல் வாக்குகளுக்கு உண்டு. அதனை அறிந்து கொண்டு எப்படியாவது அந்த வாக்குகளை எண்ணவிடக் கூடாது என்பதே அவர்களின் பிரதான நோக்கமாக இருந்தது.

வன்முறையை கட்டவிழ்த்து விட்ட டிரம்ப்… 2 ஆண்டுகளுக்கு தடா போட்ட பேஸ்புக்!
வன்முறையை கட்டவிழ்த்து விட்ட டிரம்ப்… 2 ஆண்டுகளுக்கு தடா போட்ட பேஸ்புக்!

இருப்பினும், அவர்களைத் தடுத்து பாதுகாப்புப் படையினர் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர். வாக்கு எண்ணிக்கை முடிவில் பைடன் அதிகாரப்பூர்வ அதிபரானார். வரலாறு கண்டிராத இந்த வன்முறைக்கு விதை போட்டது சாட்சாத் டிரம்ப் மட்டுமே. தோல்வியை ஏற்றுக்கொள்ளும் மனப் பக்குவம் இல்லாத அவர் தொடர்ந்து பைடனின் வெற்றி முறைகேடாக நிகழ்ந்தது என்று கூறிவந்தார். அதுமட்டுமில்லாமல் வழக்குகளையும் தொடர்ந்தார். ஆதாரமற்ற வழக்குகள் என்று நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை டிரம்பால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ - டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து ஆதரவாளர்களைத் தூபம் போட்டு எரிய வைத்தார். அதன் உச்சக்கட்டமாகத் தான் ஜனவரி 6ஆம் தேதி அட்டூழியங்கள் நிகழ்த்த காரணமாக அமைந்தது. இதனை நிறுத்துவதற்குப் பெயரளவில் ஒரு வீடியோவை டிரம்ப் ட்விட்டரில் வெளியிட்டார். ஆனால் அதிலும் பைடன் வெற்றி முறைகேடானது என்று கூற அவர் மறக்கவில்லை. மேலும் தனக்காகப் போராடும் (அவரைப் பொறுத்தவரை அது போராட்டம்) ஆதரவாளர்களைச் சிறந்தவர்கள் என்றும் கூறியிருந்தார்.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ - டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

டிரம்ப் தொடர்ந்து வன்முறையைத் தூண்டும் நோக்கில் பதிவிட்டதால் அவரது கணக்கை நிரந்தரமாக ட்விட்டர் முடக்கியது. தொடர்ந்து பேஸ்புக் நிறுவனமும் இன்ஸ்டாகிராம், பேஸ்புக்கில் டிரம்பின் கணக்கை முடக்கியது. இதுதொடர்பாக விரிவான அறிக்கையை வெளியிட்ட பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க், “ஆதரவாளர்களின் செயல்களைக் கண்டிக்காமல், மாறாக அதனைத் தூண்டிவிடும் விதமாக எங்களது சமூக வலைதளங்களில் டிரம்ப் பதிவுகளை இட்டார். இது ஒட்டுமொத்த அமெரிக்க மக்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ - டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

அவரின் பதிவுகள் வன்முறையைத் தீவிரமாக்கும் என்பதை முன்கூட்டியே அறிந்து நீக்கிவிட்டோம். ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அகற்றுவதற்கு சட்டத்திற்குப் புறம்பான வன்முறையைத் தூண்டும் விதமான பதிவுகளை நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். இந்த நேரத்தில் டிரம்பை எங்களது தளங்களை உபயோகிக்க வைத்தால் நாட்டின் அமைதி கேள்விக்குறியாகும் என்பதை நாங்கள் தீர்மானித்தோம். பதவியேற்பு முடியும் வரையிலான இரு வாரங்கள் வரை அவரது கணக்கை நாங்கள் முடக்கிவைத்திருப்போம்” என்று கூறியிருந்தார்.

’உங்கள இப்படியே விட்டா நாட்ட நாசமாக்கிருவீங்க’ - டிரம்புக்கு தடா போட்ட ’பேஸ்புக்’ மார்க் சக்கர்பெர்க்!

இதையடுத்து பேஸ்புக் நிறுவனத்தின் மேற்பார்வை குழு டிரம்பின் பதிவுகளை ஆராய்ச்சி செய்தது. அந்தக் குழு சமர்பித்த அறிக்கையின்படி, டிரம்ப்பின் பேஸ்புக் கணக்கை 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரை முடக்கிவைக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தப் பிரச்னைகளும் இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பிறகு டிரம்ப்பின் கணக்கை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்றும் என்று தெரிவித்துள்ளது. இது தனக்காக வாக்களித்த மக்களை அவமதிக்கும் செயல் என டிரம்ப் விமர்சனம் செய்திருக்கிறார்.

வன்முறையை கட்டவிழ்த்து விட்ட டிரம்ப்… 2 ஆண்டுகளுக்கு தடா போட்ட பேஸ்புக்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

“கட்சிகளுக்கு புதிய சின்னங்களை ஒதுக்குவது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும்”

ஒவ்வொரு தேர்தலிலும் கட்சிகளுக்கு புதிய சின்னங்கள் ஒதுக்கீடு செய்வது வாக்காளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பதில்...

ஆன்லைன் வகுப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகள்

கொரொனா பரவலால் தமிழக பள்ளி, கல்லூரி மானவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டுவருகின்றன. ஆன்லைன் வகுப்புகளுக்கான நெறிமுறைகள் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

’’பொய் சொன்னா அறைவேன் என்று சொன்ன நடிகர் சித்தார்த் எங்கே?’’

16வது சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் இன்று கலைவாணர் அரங்கில் தொடங்கியது. புதிய ஆசி பொறுப்பேற்ற பின்னர் நடைபெறம் இந்த முதல் கூட்டத்தில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையில் இடம்பெற்றிருப்பது குறித்து...

தளபதி 65 படத்தின் தலைப்பு அறிவிப்பு

நடிகர் விஜய் 65வது படத்தின் First Look வெளியானது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் அவரது...
- Advertisment -
TopTamilNews