ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் பேஸ்புக்… அப்போ இது இருந்தா ஸ்மார்ட்போனே வேண்டாமே!

 

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் பேஸ்புக்… அப்போ இது இருந்தா ஸ்மார்ட்போனே வேண்டாமே!

இப்போது டிஜிட்டல் சந்தையில் ஸ்மார்ட்வாட்ச்சுக்கே கடும் கிராக்கியாக இருக்கிறது. கைக்கடிகாரங்கள் தயாரித்த நிறுவனங்கள் முதல் டிஜிட்டல் உலகை நம்பியிருக்கும் பெரும்பான்மையான நிறுவனங்கள் வரை ஸ்மார்ட்வாட்ச் தயாரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. ஸ்மார்ட்போன்களைத் தயாரிக்கும் லோ பட்ஜெட் ஜியோமி முதல் ஹை பட்ஜெட் ஆப்பிள் வரை கொடிகட்டி பறக்கிறார்கள். சந்தையில் நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி நிலவுவதால் ஒவ்வொருவருக்கும் அவர்களது வசதிக்கேற்ப ஸ்மார்ட்வாட்ச்கள் கிடைக்கின்றன.

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் பேஸ்புக்… அப்போ இது இருந்தா ஸ்மார்ட்போனே வேண்டாமே!

இச்சூழலில் பேஸ்புக் நிறுவனமும் ஸ்மார்ட்வாட்ச் சந்தையில் கால்பதிக்க ஆரம்பித்துவிட்டது. அதற்கான பணிகளில் மும்முரமாகச் செயல்பட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தன்னுடைய பொருளுக்கான மவுசு குறைந்தாலும் அதற்கு மாற்றாக தன்னுடைய பொருளே இருக்க வேண்டும் என்பதில் பேஸ்புக் ஓனர் மார்க் சக்கர்பெர்க் கவனமாக இருப்பார். இன்ஸ்டாகிராமை அவர் விலைக்கு வாங்கியதை உதாரணமாகச் சொல்லலாம். அந்த வகையில் ஸ்மார்ட்வாட்ச் சந்தையிலும் களமிறங்கிவிட்டார்.

இதுவரையில் சாப்ட்வேர் எனப்படும் மென்பொருள் துறையிலேயே ஆதிக்கம் செலுத்திவந்த அவர், தற்போது ஹார்ட்வேர் எனப்படும் வன்பொருள் தயாரிப்பிலும் ஆர்வம் காட்ட தொடங்கியுள்ளார். அதன்படி, ஸ்மார்ட்வாட்ச்சோடு சேர்த்து ஓக்குலஸ் மெய்நிகர் ஹெட்செட்கள்(oculus virtual reality headsets), போர்ட்டல் (Portal) எனும் வீடியோ கால் அழைப்பு சாதனம் ஆகியவற்றையும் தயாரிக்க முடிவுசெய்திருக்கிறார். இன்னும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. சந்தையில் தற்போது இருக்கும் ஸ்மார்ட்வாட்ச்கள் போல் அல்லாமல் அதைவிட கூடுதல் அம்சங்களுடன் பேஸ்புக் வெளியிடும் என்று கூறப்படுகிறது.

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் பேஸ்புக்… அப்போ இது இருந்தா ஸ்மார்ட்போனே வேண்டாமே!

அதன்படி, இதயத்துடிப்பு, கலோரி எரிப்பு உள்ளிட்ட உடல்நலம் சம்பந்தமான ஆப்சன்களுடன் சேர்த்து பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் என அனைத்துச் செயலிகளையும் இயக்கும் வண்ணமும் போன் பேசும் வகையிலும் ஸ்மார்ட்வாட்ச் தயாரிக்கப்படவுள்ளது. கிட்டத்தட்ட ஸ்மார்ட்வாட்சை ஒரு மினி ஸ்மார்ட்போன் என்றே சொல்லலாம். சிறிய திரை ஸ்மார்ட்போன் தனது போட்டி நிறுவனமான கூகுளின் இயங்குதளத்தை (OS) விடுத்து தானே தயாரிக்கு இயங்குதளத்தை பேஸ்புக் பயன்படுத்தப் போவதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம் செய்யும் பேஸ்புக்… அப்போ இது இருந்தா ஸ்மார்ட்போனே வேண்டாமே!

தயாரிப்புப் பணிகள் முடிவடைந்து அடுத்த வருடம் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எந்த மாதிரியான அம்சங்களுடனும், விலையுடனும் வரும் என்று இன்னும் தெரியவில்லை. ஒருவேளை அடுத்த வருடம் வெளியாகும் பட்சத்தில் ஸ்மார்ட்வாட்ச் பிரியர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில், பேஸ்புக் பிராண்ட் வேல்யூ அப்படி!