இந்த மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார்படுத்தும் வானிலை அறிக்கை!

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார்படுத்தும் வானிலை அறிக்கை!

தமிழகத்தில் 7 மாவட்டங்களில் பலத்த காற்று வீசும் என்று 3 மாவட்டங்களில் அதீத கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார்படுத்தும் வானிலை அறிக்கை!

தமிழகத்தில் நிவர் புயல் காரணமாக 7 மாவட்டங்களில் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, விழுப்புரம் ,கடலூர், மயிலாடுதுறை ,நாகை, புதுச்சேரி, காரைக்காலில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார்படுத்தும் வானிலை அறிக்கை!

புயல் காரணமாக வரும் 27ஆம் தேதி வரை தமிழகம் புதுச்சேரியில் மழை இருக்கும் என்றும் நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதீத கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ,கடலூரில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதேபோல் தஞ்சை, திருவாரூர், புதுச்சேரியிலும் இன்று நிவர் புயல் காரணமாக மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில்  கனமழை வெளுத்து வாங்குமாம் : உஷார்படுத்தும் வானிலை அறிக்கை!

அதேபோல் திருவண்ணாமலை, விழுப்புரம் ,கள்ளக்குறிச்சி ,கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் நாளை இடி மின்னலுடன் கூடிய அதீத கனமழை பெய்யும் என்று வானிலையா ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.