“அமைச்சர எதிர்த்து போட்டியிடுறீயா இந்தா வச்சிக்கோ” – தாராளபிரபுவான ஸ்டாலின்!

 

“அமைச்சர எதிர்த்து போட்டியிடுறீயா இந்தா வச்சிக்கோ” – தாராளபிரபுவான ஸ்டாலின்!

எடப்பாடி உள்பட அனைத்து அமைச்சர்களையும் வீழ்த்த வேண்டும் என்று தேர்தல் அறிவிப்பு வரும் முன்பே பிரச்சாரத்தில் சூளுரைத்தார் ஸ்டாலின். இதனால் திமுக நேர்காணலில் அமைச்சர்களின் தொகுதிகளுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களிடம் பிரத்யேகமாக கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஒருவேளை அமைச்சர்களை எதிர்த்து தோற்றாலும் அதற்குச் சமமான கட்சிப் பதவி கொடுக்கப்படும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

“அமைச்சர எதிர்த்து போட்டியிடுறீயா இந்தா வச்சிக்கோ” – தாராளபிரபுவான ஸ்டாலின்!

அவ்வாறு நிறுத்தப்பட்ட வேட்பாளர்களில் பெரும்பாலோனோர் பெரும் பணபலமோ படைபலமா இல்லாத வேட்பாளர்கள் தான். இவ்வளவு ஏன் எடப்பாடியை எதிர்த்து நிற்கும் இளைஞர் சம்பத் குமார் அவ்வளவு பெரிய பணக்காரர் எல்லாம் கிடையாது. அவரும் ஒரு விவசாயி தான் என்கிறார்கள். அவருக்குத் தேர்தலுக்காக பண உதவி செய்வதே சேலம் திமுகவின் பெரும்புள்ளியான செல்வகணபதி தான் என்றும் கூறப்படுகிறது. கிட்டத்தட்ட இதே நிலை தான் அனைத்து வேட்பாளர்களுக்கும்.

“அமைச்சர எதிர்த்து போட்டியிடுறீயா இந்தா வச்சிக்கோ” – தாராளபிரபுவான ஸ்டாலின்!

பண பலம் இல்லாவிட்டாலும் செலவழித்து தானே ஆக வேண்டும். அதில் எஸ்கேப் ஆக முடியாது. அப்படி செய்தால் வெற்றி என்பது எட்டாக்கனியாகிவிடும். பிரச்சாரத்தில் பங்கேற்கும் நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோருக்கு சாப்பாட்டு செலவு, இன்ன பிற செலவுகள் என காசு பிய்த்துக்கொண்டு போகும். அதனால் அமைச்சர்களை எதிர்த்துப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் திமுக கட்சித் தலைமை மற்ற வேட்பாளர்களுக்கு கொடுப்பதிலிருந்து 50% கூடுதலாக தேர்தல் நிதி வழங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படி அளிப்பதன் மூலம் அவர்களால் அமைச்சர்களை எதிர்த்து டஃப் ஃபைட் கொடுக்க முடியும் என ஸ்டாலின் கணித்துள்ளராம்.