நவம்பர் வரை ரேஷனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

 

நவம்பர் வரை ரேஷனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

கடந்த 27 ஆம் தேதி மின்சார சட்டதிருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி தமிழகத்தில் விவசாயிகள் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம், திருவாரூர், வேதாரண்யம், மதுரை உள்ளிட்ட இடங்களில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு ஆதரவாக சென்னை அண்ணாநகர் இல்லத்தின் முன் வைகோ கருப்புக் கொடியுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். அதே போல மத்திய அரசு வெளியிட்டுள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கைக்கும் விவசாயிகள் உட்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நவம்பர் வரை ரேஷனில் கூடுதலாக 5 கிலோ அரிசி வழங்கப்படும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

இந்த நிலையில் விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்துக்கும் அரசு அனுமதி அளிக்காது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் குடவாசலில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அவர், விவசாயிகள் விரும்பாத எந்த திட்டத்தையும் டெல்டா மாவட்டங்களில் தமிழக அரசு செயல்படுத்தாது என்றும் ரேஷனில் நவம்பர் வரை ஏற்கனவே வழங்கப்படும் 20 கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருவருக்கு 5 கிலோ அரிசி வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.