ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை லாக்டெளன் நீட்டிப்பு!

 

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை லாக்டெளன் நீட்டிப்பு!

கடந்த ஆண்டு டிசம்பரில் சீனாவில் தொடங்கிய கொரோனா நோய்த் தொற்றல் தற்போது உலகின் பெரும்பாலான நாடுகளில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. நாளுக்குள் நோய்ப் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. நோய் பரவுவதைத் தடுக்க அந்தந்த நாட்டு அரசுகள் கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை லாக்டெளன் நீட்டிப்பு!

இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்று அதிகரிக்கும் சூழல் வந்தவுடன் மார்ச் 24-ம் தேதி லாக்டெளன் அறிவிக்கப்பட்டது. அது இந்நாள் வரை தொடர்கிறது. நோய்த் தொற்று அதிகம் பராவாது இடங்களில் சில விலக்குகள் அளிக்கப்பட்டன. நோய்த் தொற்று அதிகமான இடங்களான சிவப்பு பகுதிகளில் லாக்டெளன் கடுமையாக்கப்பட்டுள்ளது. ஆனபோதும் நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை கட்டுக்குள் வரவில்லை.

நாள்தோறும் கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் சூழலில் ஜூன் 30 -ம் தேதியுடன் லாக்டெளன் முடிவடையுமா என்பது கேள்விக்குறிதான். ஏற்கெனவே மேற்கு வங்க அரசு அம்மாநிலத்தில் ஜூலை மாதம் 31-ம் தேதி வரை லாக்டெளன் காலத்தை நீட்டியுள்ளது. இதன்மூலம் அம்மாநிலத்தில் கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவரலாம் எனத் திட்டமிடுகிறது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜூலை 31 வரை லாக்டெளன் நீட்டிப்பு!

மேற்கு வங்கத்தைப் போலவே தற்போது ஜார்க்கண்ட் மாநில அரசும் ஜூலை 31-ம் தேதி வரை லாக்டெளனை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. இதேபோல பல மாநிலங்களும் ஊரடங்கை நீட்டிக்கக்கூடும் என்று பேசப்படுகிறது. இந்திய அளவில் நோய்த் தொற்றலில் மூன்றாம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் ஜூன் 30-ம் தேதியுடன் லாக்டெளனை விலக்கிக்கொள்ளப்படும் என்பது சந்தேகத்துக்கு உரியது. மருத்துவக் குழுவின் ஆலோசனைக்குப் பிறகே லாக்டெளனை நீட்டிப்பதா, ரத்து செய்வதா என்று முடிவெடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.