சோப்பு கிடைக்காதபட்சத்தில் மட்டும் சானிடைசர் யூஸ் பண்ணுங்க…. இல்லன்னா… எச்சரிக்கும் நிபுணர்கள்…

சோப்பு கிடைக்காதபட்சத்தில் மட்டும் சானிடைசர் யூஸ் பண்ணுங்க…. இல்லன்னா… எச்சரிக்கும் நிபுணர்கள்…

ஆல்கஹால் அடிப்படையிலான சானிடைசர், கிருமி நாசினி மற்றும் சோப்புகள் ஆகியவை தொற்று நோயானா கொரோனா வைரஸை செயலிழக்க செய்கிறது மற்றும் பரவுவதை கட்டுப்படுத்துகின்றன என்பதால் அவற்றின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆல்கஹால் அடிப்படையிலான ஹேண்ட் சானிடைசரில் ஆல்கஹால் மற்றும் எத்தனால் அதிக சதவீதம் உள்ளது. கொரோனா வைரஸ் விழிப்புணர்வு காரணமாக மக்கள் அடிக்கடி சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தம் செய்கின்றனர்.

சோப்பு கிடைக்காதபட்சத்தில் மட்டும் சானிடைசர் யூஸ் பண்ணுங்க…. இல்லன்னா… எச்சரிக்கும் நிபுணர்கள்…

அதேசமயம் அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது போல் ஹேண்ட் சானிடைசரை அதிகம் பயன்படுத்தினால் உடலில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை செய்துள்ளனர். சானிடைசர் அதிகம் பயன்படுத்துவதால் கைகள் உலர்வது, அரிப்பு, சிவத்தல் மற்றும் செதில்கள் போன்ற எதிர்மறையான விளைவுகள் ஏற்படும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.

சோப்பு கிடைக்காதபட்சத்தில் மட்டும் சானிடைசர் யூஸ் பண்ணுங்க…. இல்லன்னா… எச்சரிக்கும் நிபுணர்கள்…

சி.எஸ்.ஐ.ஆர்.-நச்சுயியல் ஆராய்ச்சி இந்திய பயிலகத்தின் இயக்குனர் டாக்டர் அலோக் தவான் இது தொடர்பாக கூறுகையில், சானிடைசர் பயன்படுத்தும் கொள்கையை நியாயமான முறையில் பயன்படுத்த வேண்டும் மற்றும் சோப்பு மற்றும் தண்ணீர் கிடைக்காத சமயத்தில் மட்டுமே சானிடைசர் பயன்படுத்த வேண்டும். 2 முதல் 3 மி.லி. சானிடைசர் பயன்படுத்துவதால் உடலில் எந்த தீங்கும் ஏற்படாது. அதேசமயம் ஒவ்வொரு 20 நிமிடத்துக்கும் ஒரு முறை கைகளை சுத்திகரிப்பு செய்ய வேண்டும் என பரிந்துரை செய்யப்படவில்லை என்பதை ஒருவர் தெரிந்து கொள்ள வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிகமாக பயன்படுத்தினால் பாதகமான விளைவுகள் ஏற்படும் என தெரிவித்தார்.