காங்கிரசில் ஒழுக்கம் இல்லை… தலைவர் இல்லை… அசாமில் பா.ஜ.க.வுக்கு தாவிய 2 எம்.எல்.ஏ.க்கள்

 

காங்கிரசில் ஒழுக்கம் இல்லை… தலைவர் இல்லை… அசாமில் பா.ஜ.க.வுக்கு தாவிய 2 எம்.எல்.ஏ.க்கள்

அசாமில் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய 2 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தனர்.

காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏ.க்கள் ராஜ்தீப் கோவாலா மற்றும் அஜந்தா நியோக் நேற்று அசாம் நிதியமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்தனர். அஜந்தா நியோக் காங்கிரசில் இணைந்த பிறகு அஜந்தா நியோக் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த சில தினங்களுக்கு முன் முதல்வர் சர்பானந்தா சோனோவாலை சந்தித்தேன். அந்த சந்திப்புக்கு பிறகு, காங்கிரஸ் என்னிடம் நடந்து கொண்ட விதம் என்னை காயப்படுத்தியது.

காங்கிரசில் ஒழுக்கம் இல்லை… தலைவர் இல்லை… அசாமில் பா.ஜ.க.வுக்கு தாவிய 2 எம்.எல்.ஏ.க்கள்
காங்கிரஸ்

அனைத்திந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்தது போன்ற பிரச்சினைகள் உள்ளன. காங்கிரஸ் கட்சியில் எந்த ஒழுக்கம் இல்லை. மேலும் அந்த கட்சி ஜனநாய முடிவுகளை எடுக்கவில்லை மற்றும் திசையற்றது. கீழ்மட்ட தொண்டர்கள் குறித்து அந்த கட்சியின் தலைமை கவலைப்படவில்லை. காங்கிரசிலிருந்து பிரிந்து செல்வதற்கான முடிவை எடுத்தற்து இதுவே காரணம். பா.ஜ.க.வை வலுப்படுத்த அடிமட்டத்தில் உயர்த்த என்னால் முடிந்த அளவு முயற்சி செய்வேன். எனககு ஒருவித பொறுப்பு வழங்கப்பட்டால் நான் அதை மிகுந்த பொறுப்புடன் நிறைவேற்றுவேன்.

காங்கிரசில் ஒழுக்கம் இல்லை… தலைவர் இல்லை… அசாமில் பா.ஜ.க.வுக்கு தாவிய 2 எம்.எல்.ஏ.க்கள்
பா.ஜ.க.

எந்தவொரு முன்நிபந்தனையும் இன்றிதான் கட்சியில் சேர்ந்தேன். தேர்தலில் போட்டியிட எனக்கு வாய்ப்பு வழங்கினனால் கட்சியின் முடிவுக்கு கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் தெரிவித்தார். ராஜ்தீப் கோவாலா கூறுகையில், காங்கிரஸ் இப்போத ஒரு தொலைநோக்கு மற்றும் தலைவர் இல்லாத கட்சி. அசாம் குறித்து அவர்களுக்கு எந்த திட்டமும் இல்லை. அத்தகைய கட்சியில் இருப்பது பொருத்தமானது என்று நான் கருதவில்லை. கிராம புறங்களில் சாதரண தொண்டர்கள் கூட மக்களுக்கு பணியாற்றுகிறார்கள் அதுதான் என்னை பா.ஜ.க.வில் இணைய ஈர்த்தது என்று தெரிவித்தார்.