சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

 

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

சென்னை பெரவள்ளூர் பகுதியைச் சேர்ந்த சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அவரை வலுகட்டாயமாக ஆட்டோவில் கடத்த முயன்றதாகவும் திருவிக நகரைச் சேர்ந்த ஹரிபாபு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். யார் இந்த ஹரிபாபு என்றும் சிறுமி எப்படி தப்பித்தார் என்ற தகவலும் டாப் தமிழ் நியூஸ் டாட் காமுக்கு எக்குளுசிவ்வாக கிடைத்தது.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி
சம்பவத்தன்று சிறுமி, தனியாக தெருவில் நடந்துச் சென்றுக்கொண்டிருந்ததை கவனித்த ஆட்டோ டிரைவர் ஹரிபாபு, அவரின் அருகே ஆட்டோவை நிறுத்தி பேச்சுகொடுத்துள்ளார். அப்போது அவர் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்துள்ளார். ஆட்டோ ஓட்டும் போது எதற்கு ஹெல்மெட் என்ற சந்தேகம் சிறுமிக்கு ஏற்பட்டாலும் ஆட்டோ டிரைவர் கேட்டதற்கு எந்தவித பதிலும் சொல்லாமல் நடந்துச் சென்றுள்ளார். அப்போது, பிளே ஸ்கூல் இங்கு எங்கு இருக்கிறது என்று கேட்க, எனக்கு தெரியாது என்று கூறியபடி சிறுமி வேகமாக நடக்கத் தொடங்கினாள்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

அப்போது ஆட்டோவிலிருந்தபடியே ஹரிபாபு, சிறுமியின் கையைப்பிடித்து இழுத்துள்ளார். அதனால் சிறுமி அதிர்ச்சியடைந்ததோடு ஹரிபாபுவிடம் மல்லுகட்டியுள்ளார். என்னை விட்டுவிடுங்கள் என்றும் கெஞ்சியுள்ளார். ஆனால், ஹரிபாபு சிறுமியை பிடித்து ஆட்டோவில் ஏற்ற முயன்றுள்ளார். அதற்கு சிறுமி எதிர்ப்பு தெரிவித்ததோடு சத்தம் போட்டுள்ளார். தெருவில் யாரும் இல்லாததால் சிறுமிக்கு உதவவில்லை. சிறுமியை சத்தம் போடாதே என்று மிரட்டிய ஹரிபாபு, பாக்கெட்டில் வைத்திருந்த மயக்க ஸ்பீரேவை எடுத்து சிறுமியின் முகத்தில் அடித்துள்ளார்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

சுதாரித்துக் கொண்ட சிறுமி, முகத்தை திருப்பிக் கொண்டார். அதனால் அவரின் துப்பட்டாவில் மயக்க ஸ்பீரே பட்டுள்ளது. இதையடுத்து சிறுமி, தப்பிக்க முயன்றபோது அவரின் வாயில் குத்தியுள்ளார் ஹரிபாபு. அதனால் இன்னும் அதிகமாக சிறுமி சத்தம் போட்டுள்ளார். உடனே சிறுமியின் தலைமுடியைப்பிடித்து இழுத்து ஆட்டோவுக்குள் ஏற்ற முயற்சி செய்துள்ளார் ஹரிபாபு. அப்போதுதான் அவரின் கையைப்பிடித்து கடித்த சிறுமி அங்கிருந்து ஓடி வீட்டுக்கு வந்துள்ளார். சிறுமியின் அப்பா குடும்பத்தை பிரிந்து சென்றுவிட்டார். அதனால் சிறுமியின் அம்மாதான் வேலைக்குச் சென்று சிறுமியை படித்த வைத்துக் கொண்டிருக்கிறார்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

வீட்டுக்குச் சென்ற சிறுமி, தன்னுடைய அத்தை மற்றும் அம்மாவிடம் மட்டும் ஆட்டோ டிரைவர் நடந்து கொண்ட சம்பவத்தை விளக்கமாக கூறி கதறி அழுதுள்ளார். அப்போது சிறுமிக்கு ஆறுதல் கூறிய அவர்கள் என்ன செய்வதென்று யோசித்துள்ளனர். உடனடியாக காவல் நிலையத்துக்கும் அவர்கள் செல்லவில்லை. நீண்ட யோசனைக்குப்பிறகு சிறுமியின் அம்மா செம்பியம் காவல் நிலையத்துக்கு சென்று விவரத்தைக் கூறியுள்ளார். இந்தத் தகவல் செம்பியம் உதவி கமிஷனர் பொறுப்பு கோ.அரிக்குமாருக்கு தெரிந்ததும் சிறுமியின் அம்மாவிடம் அவர் விசாரித்துள்ளார். அப்போது அவர் கூறிய தகவலின்படி செம்பியம் போலீஸார் சிறுமியைக் கடத்த முயற்சி என்ற கோணத்தில் விசாரணை நடத்த தொடங்கினர்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

அப்போதுதான் சிறுமியின் அம்மா இன்னொரு அதிர்ச்சி தகவலை உதவி கமிஷனரிடம் கண்ணீர்மல்க கூறினார். அதில், என் மகளின் கையைப் பிடித்த ஆட்டோ டிரைவர் அவளின் மார்பு, வயிறு பகுதிகளில்…. என்று வார்த்தையை முழுங்கியுள்ளார். அதைக்கேட்டு உதவி கமிஷனர், இது கடத்தல் முயற்சி வழக்கு இல்லை. சிறுமிக்கு பாலியல் தொல்லை வழக்கு என்று கூறியதோடு செம்பியம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரியிடம் வழக்கை விசாரிக்கும்படி கூறியுள்ளார். அதோடு துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணாவுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்தத் தகவல் இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் அருண், கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் வரை சென்றது.

 

ஏற்கெனவே சாத்தான்குளம் சம்பவத்தில் காவல் துறையினருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது. அதனால் இந்தச் சிறுமி வழக்கில் சிறப்பாக செயல்படும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா மேற்பார்வையில் உதவி கமிஷனர் அரிக்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் வேலுமணி, திவ்யகுமாரி மற்றும் போலீஸார் விசாரணையில் களமிறங்கினர். சம்பவ இடத்துக்கு ஒரு டீம் போலீசார் சென்று சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தது. இன்ஸ்பெக்டர் திவ்யகுமாரி, சிறுமியின் வீட்டுக்கே சென்று அவரிடம் என்ன நடந்தது என்று கேட்டறிந்தார்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

சிறுமி, காலையில் மாவு வாங்க கடைக்குச் சென்றேன். அப்போது உடைச்ச கடலை வாங்க மறந்துவிட்டேன். அதனால் காலை 8 மணியளவில் மீண்டும் கடைக்கு நடந்துச் சென்றேன். அப்போதுதான் என்னை இடிப்பது போல ஒரு ஆட்டோ அங்கு வந்தது. ஆட்டோவை ஓட்டிய டிரைவர் அங்கிள் தலையில் ஹெல்மெட் அணிந்திருந்தார். கறுப்பு சர்ட், பேண்ட் அணிந்திருந்தார். அவரின் பேண்டில் டிக்டாக் எம்பளம் இருந்தது. ஆட்டோவில் இருந்தபடியே என் கையைப்பிடித்து இழுத்தார். அதனால் அவரிடமிருந்து தப்பிக்க முயன்றேன். அப்போதுதான் தண்ணீர் போல ஒன்றை என்மீது தெளித்தார். அது என்னுடைய துப்பட்டாவில் பட்டது. அடுத்து பேட் டச்சாக என்னை தொட்டார். நான் கத்தினேன். அதனால் வாயில் குத்துவிட்டார். அப்போதுதான் கையைப்பிடித்து கடித்துவிட்டு தப்பிவிட்டேன் என்று கூறினார்.

சிறுமியின் இந்த வாக்குமூலம் அடிப்படையில் ஆட்டோ டிரைவர் ஹரிபாபு மீது போக்ஸோ மற்றும் இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் செம்பியம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்தனர். ஆட்டோவின் பதிவு நம்பர் அடிப்படையில் விசாரித்து சிறுமியிடம் தவறாக நடக்க முயன்ற ஹரிபாபுவை கண்டுபிடித்தோம். அவரிடம் விசாரித்தபோது சொந்த ஊர் வந்தவாசி என்றும் டிப்ளமோ எலக்ட்ரிக் இன்ஜினீயரிங் படித்த ஹரிபாபு, அதை பாதியில் விட்டுவிட்டு சென்னையில் உள்ள அக்காள் வீட்டுக்கு வந்துவிட்டார். வேலை இல்லாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த ஹரிபாபுவுக்கு அவரின் அக்காள்தான், சொந்தமாக ஆட்டோ வாங்கி கொடுத்துள்ளார். அந்த ஆட்டோவை ஓட்டி வரும் ஹரிபாபுவின் ஸ்டாண்ட் பெரம்பூர் ரயில் நிலையம்.

 

ஹரிபாபுவிடம் முதலில் போலீசார் விசாரித்தபோது நான் எந்த சிறுமியிடமும் தவறாக நடக்கவில்லை என கூறியுள்ளார். அப்போது ஹரிபாபுவின் போட்டோவை சிறுமியின் அம்மா செல்போனுக்கு அனுப்பி சிறுமியிடம் அடையாளம் காட்டும்படி போலீசார் கூறியுள்ளனர். ஹெல்மெட் அணிந்திருந்தால் முகம் சரியாக தெரியவில்லை. ஆனால், அவர் அணிந்திருந்த கறுப்பு பேண்டில் டிக்டாக் எம்பளம் இருந்தது என்று அடையாளம் கூறினாள். போலீசார் விசாரித்தபோது கறுப்பு சட்டையை மாற்றிவிட்டு ஹரிபாபு வெள்ளை சட்டை அணிந்திருந்தார். ஆனால் பேண்ட்டை மாற்றவில்லை. அதனால் போலீசாரிடம் சிக்கிக் கொண்டார். மேலும் சிறுமி கடித்த காயமும் ஹரிபாபுவின் கையில் இருந்தது. இதையெல்லாம் வைத்து ஹரிபாபுவை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி

சிறுமி வழக்கை திறம்பட விசாரித்த போலீஸ் டீமுக்கு சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். அதோடு சம்பந்தப்பட்ட சிறுமியின் தைரியத்தை பாராட்டி அவருக்கு பணபரிசையும் கொடுத்துள்ளார். நுண்ணறிவு பிரிவு துணை கமிஷனர் திருநாவுகரசு, புத்தகம் ஒன்றை சிறுமிக்கு பரிசாக அளித்தார். இதுதவிர மற்ற போலீஸ் அதிகாரிகள் சிறுமியின் தைரியத்தையும் சமயோகித புத்திச்சாலித்ததனத்தையும் பாராட்டியுள்ளனர். சிறுமி மட்டும் ஆட்டோ டிரைவர் ஹரிபாபுவின் கையை கடித்துவிட்டு தப்பிக்கவில்லை என்றால் அவருக்கு என்னவேண்டும் என்றாலும் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி
துணை கமிஷனர் ராஜேஷ் கண்ணா

ஹரிபாபு குறித்து அவரின் அக்காவிடம் போலீசார் கூறியபோது என் தம்பி அப்படிப்பட்டவன் இல்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஆதாரங்களுடன் குற்றத்தை போலீசார் நிரூபித்தபோது ஹரிபாபுவின் சகோதரி அமைதியாகிவிட்டார். துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணா, உதவி கமிஷனர் அரிக்குமார் கேட்ட கேள்விகளுக்கு ஹரிபாபு பதிலளித்துள்ளார்.

சென்னை தைரிய சிறுமியின் பிரத்தியேக தகவல் – ஆட்டோ டிரைவரின் பகீர் பின்னணி
உதவி கமிஷனர் அரிகுமார்

அப்போது அவர் கூறிய தகவல்களை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்துள்ளனர். ஹரிபாபு குறித்த தகவல்களை போலீசார் விசாரித்துவருகின்றனர். அவர் எதற்காக படிப்பை பாதியில் நிறுத்தினார். அவரின் நண்பர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். மேலும் அவரின் செல்போன் கால் ஹிஸ்ட்ரிகள், செல்போன் ஆகியவற்றை போலீசார் ஆய்வு செய்துவருகின்றனர். ஹரிபாபுவின் முழு விவரங்களை சேகரித்து ரிப்போர்ட் கொடுக்கும்படி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். அதோடு இந்த வழக்கை சிறப்பாக விசாரித்த போலீஸ் டீமுக்கு முதல்வர் விருது வழங்க பரிந்துரைக்கப்படவுள்ளது. அதன்முன்னோட்டமாகத்தான் ஈரோட்டில் நடந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னை சிறுமியின் வீர தீர செயலுக்கும் சென்னை போலீசாரின் சிறப்பாக பணிக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்தார்.

எஸ்.செல்வம்