Exclusive: ரங்கராஜ் பாண்டேவை விரட்டியடித்த பச்சமுத்து… சீட்டுக் கொடுத்து வேட்டு வைத்த மு.க.ஸ்டாலின்..!

 

Exclusive: ரங்கராஜ் பாண்டேவை விரட்டியடித்த பச்சமுத்து… சீட்டுக் கொடுத்து வேட்டு வைத்த மு.க.ஸ்டாலின்..!

வேண்டுமானால் உங்களது மகன் ரவிக்கு சட்டமன்றத்தேர்தலில் ஒரு தொகுதியை தருகிறேன். பாண்டேவை வேலையை விட்டு நீக்கியே ஆக வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின்.

பிரபல பத்திரிகையாளரும், தந்தி டி.வி-யின் தலைமை செய்தி ஆசிரியருமான ரங்கராஜ் பாண்டே தந்தி டி.வியில் ராஜினாமா செய்தார்.  ‘தந்தி டி.வி’ ரங்க ராஜ் பாண்டே என்று கூறினால்தான் பலருக்கு அடையாளம் தெரியும். அந்த அளவுக்கு அந்தச் சேனலில் இருந்து புகழ்பெற்ற அவர், திடீரென ராஜினாமா செய்ததும், அவர் குறித்து நிறைய வதந்திகள் பரவியது. அவர் புதிதாக ஒரு சேனல் தொடங்க இருப்பதாகவும், மற்ற சேனலுக்குச் செல்கிறார் என்று பல வதந்திகள் பேசப்பட்டது. ஆனால், அந்த வதந்திகளை மறுத்த பாண்டே, “நான் தந்தி டி.வி-யில் இருந்து விலகி உள்ளேனே தவிர, பத்திரிகையாளர் என்ற என் கடமையில் இருந்து விலகவில்லை. தொடர்ந்து இதே துறையில் இருந்து, இது தொடர்பான பணிகளை மட்டுமே செய்ய உள்ளேன். 

Pandey

அடுத்து அஜித்துடன் நேர்கொண்ட பார்வைபடத்தி நடித்தார். யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வந்தார். இந்த நிலையில் எஸ்.ஆர்.எம். பச்சமுத்துவின் வேந்தர் டிவியில் சி இ ஓவாக சமீபத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் தான் அவரது வேலைக்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது.

கடந்த மக்களவை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து பாரிவேந்தர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.  ரங்கராஜ் பாண்டே திமுகவுக்கு சுத்தமாக ஆகாதவர். பாஜகவின் விசுவாசியாக கருதப்படுபவர். அதையும் மீறித்தான்  நொடித்துக் கொடக்கும் வேந்தர் டிவியை ரங்கராஜ் பாண்டேவை அழைத்து வந்து பிரபலப்படுத்த நினைத்தார் பச்சமுத்து. 

ஆனால் ரங்கராஜ் பாண்டேவின் நோக்கம் வேந்தர் டிவிக்கு வந்தவுடன் வேறாக மாறியது. புதியதலைமுறை சேனல் மீது குறி வைக்கத் தொடங்கினார். பாண்டேவின் இந்த மூவ்களை அறிந்த்த புதிய தலைமுறை நிர்வாக ஆசிரியர் கார்த்திகைசெல்வன் பதறிப்போய் விட்டார். நமது வேலைக்கே ஆப்பு வைக்கப்பார்க்கிறார் என்பதை உணர்ந்த கார்த்திகைசெல்வன், ரங்கராஜ் பாண்டே விவகாரத்தை வெவ்வேறு நபர்கள் மூலமாக மு.க.ஸ்டாலினுக்கு கொண்டு போய்ச் சேர்க்கிறார். 

patchamuthu

உடனே பச்சமுத்துவின் லைனுக்கு போன மு.க.ஸ்டாலின், ‘’பாண்டே நமது கட்சிக்கு எதிராக எவ்வளவோ சூழ்ச்சிகளை செய்து வருகிறார். திமுக கூட்டணியில் இருக்கும் நீங்கள் உங்கள் தொலைக்காட்சிக்கு அவரை சி இ ஓவாக உட்கார வைத்து அழகு பார்க்கிறீர்கள். உங்கள் தொலைக்காட்சியை வைத்து பாஜகவுக்குத் தான் அவர் பிரச்சாரம் செய்வார். அவரை வேலையை விட்டு நீக்குங்கள் எனக் கூறி இருக்கிறார் மு.க.ஸ்டாலின். 
ஆனாலும், டி.வி.இப்போது இருக்கும் நிலைமையை எடுத்துக் கூறி தயங்கி இருக்கிறார் பச்சமுத்து. 

stalin

விடுங்கள் வேறு ஆட்களை போட்டுக் கொள்ளலாம். வேண்டுமானால் உங்களது மகன் ரவிக்கு சட்டமன்றத்தேர்தலில் ஒரு தொகுதியை தருகிறேன். பாண்டேவை வேலையை விட்டு நீக்கியே ஆக வேண்டும்’ எனக் கூறியிருக்கிறார் மு.க.ஸ்டாலின். அவரது பேச்சை தட்ட முடியாமல் பாண்டேவை நீக்கும் முடிவுக்கு வந்திருக்கிறார் பச்சமுத்து. பாண்டே எதுவும் பிரச்னை செய்து விடக்கூடாது என்பதற்காக 6 மாத சம்பளத்தைக் கொடுத்து செட்டில்மெண்ட் செய்ய முடிவெடுத்து இருக்கிறார்கள்.