பார்வை குறைபாட்டால் வேதனை… முன்னாள் ராணுவ வீரர் கழுத்தை அறுத்து தற்கொலை

 

பார்வை குறைபாட்டால் வேதனை… முன்னாள் ராணுவ வீரர் கழுத்தை அறுத்து தற்கொலை

விருதுநகர்

ராஜபாளையம் அருகே பார்வை குறைபாட்டினால் மனமுடைந்த முன்னாள் ராணுவ வீரர் பிளேடால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அடுத்த பச்சை காலனியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (42). ராணுவத்தில் பணிபுரிந்து வந்த இவர், ஒரு கண்ணில் பார்வை குறைபாடு ஏற்பட்டதால் விருப்ப ஓய்வு பெற்று, குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இவருக்கு தேவி என்ற ண்மனைவியும், ஒரு ஆண், ஒரு பெண் குழந்தை உள்ளனர்.

இந்த நிலையில், பாண்டியராஜனின் மற்றொரு கண்ணிலும் பார்வை குறைபாடு ஏற்பட்டு உள்ளது. இரு கண்களும் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்த பாண்டியராஜன், வாழ்வில் விரக்தியடைந்து காணப்பட்டு உள்ளார். மேலும், குடும்பத்தினரிடம் சரிவர பேசாமல் இருந்து வந்துள்ளார். இதனால் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அவர், நேற்று அறைக்குள் சென்று கழுத்து மற்றும் கைகளை பிளேடால் அறுத்துக் கொண்டார்.

பார்வை குறைபாட்டால் வேதனை… முன்னாள் ராணுவ வீரர் கழுத்தை அறுத்து தற்கொலை

அறையில் இருந்து நீண்ட நேரமாக வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது மனைவி தேவி சென்று பார்த்தார். அப்போது, பாண்டியராஜன் கழுத்து மற்றும் கைகள் அறுக்கப்பட்டு, ரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பாண்டியராஜனை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், பாண்டியராஜன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். தகவலறிந்த ராஜபாளையம் வடக்கு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, பாண்டியராஜன் தற்கொலை செய்வதற்கு முன்பாக அவர் எழுதிய கடிதம் போலீசாரிடம் கிடைத்தது.

அதில், பார்வை குறைபாடு காரணமாக வாழ முடியாத நிலையில், இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், தனது மரணத்திற்கு யாரும் காரணமில்லை என்றும் அவர். தெரிவித்து உள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றிய போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.