ஊரடங்கால் வறுமையில் வாடும் முன்னாள் முதல்வரின் குடும்பம் !

 

ஊரடங்கால் வறுமையில் வாடும் முன்னாள் முதல்வரின் குடும்பம் !

பீகாரின் முன்னாள் காங்கிரஸ் முதல்வர் போலா பாஸ்வான் சாஸ்திரியின் குடும்பம் தற்போது ஊரடங்கால் வறுமையால் வாடுவதாக செய்தி வெளியாகி உள்ளது.

1968 மற்றும் 1972 க்கு இடையில் மூன்று முறை பீகார் அரசாங்கத்தின் முதல்வராக இருந்த நேர்மையான அரசியல்வாதி என அறியப்பட்ட தலித் போலா பாஸ்வான் சாஸ்திரியின் குடும்ப உறுப்பினர்கள் தாங்கள் வாழ்வதற்காக கிராம பணக்காரர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

ஊரடங்கால் வறுமையில் வாடும் முன்னாள் முதல்வரின் குடும்பம் ! ஊரடங்கால் வறுமையில் வாடும் முன்னாள் முதல்வரின் குடும்பம் !

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில் எங்களைப் போன்றவர்களைப் பற்றி அரசாங்கம் சிந்திக்கவில்லை, எங்களுக்கு எந்த ஏற்பாடுகளும் செய்யவில்லை. பாட்னாவிலிருந்து 325 கி.மீ வடகிழக்கில் உள்ள பூர்னியா மாவட்டத்தில் உள்ள பைர்காச்சி கிராமத்தில் தற்போது அந்த குடும்பம் வசித்து வருகிறது. 26 பேர் கொண்ட நிலமற்ற கூட்டுக் குடும்பத்தில் ஏழு உறுப்பினர்கள் மட்டுமே வேலைக்கு சென்றனர். அவரது மூன்று மகன்கள் மற்றும் மூன்று மருமகன்கள் இந்த ஊரடங்கு நேரத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஊரடங்கால் ஒரு மாதம் மட்டுமே சமாளித்து வந்த அந்த குடும்பம் தற்போது எந்த வேலையில்லாமல் பணக்காரர்களிடமிருந்து கடன் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

ஊரடங்கால் வறுமையில் வாடும் முன்னாள் முதல்வரின் குடும்பம் !

பல முன்னாள் முதலமைச்சர்களும் அவர்களது குடும்பத்தினரும் தங்கள் பதவிக்காலம் முடிந்தபின்னர் பல ஆண்டுகளாக அரசாங்க பங்களாக்களில் தங்கியிருப்பதாக அறியப்பட்ட ஒரு நாட்டில் குடும்பம் இத்தகைய துன்பத்தை எதிர்கொள்கிறது

சுமார் 11 மாதங்கள் மூன்று குறுகிய காலங்களில் பீகாரை ஆண்ட சாஸ்திரி (செப்டம்பர் 21, 1984 முதல் செப்டம்பர் 9, 1984 வரை), மாநிலங்களவை உறுப்பினராக இருந்தவர்.