’’இங்க எல்லாமே டூப்பு’’ – சத்தம் போட்டு கத்திய கமல்

 

’’இங்க எல்லாமே டூப்பு’’ – சத்தம் போட்டு கத்திய கமல்

ளத்தூர் கண்ணம்மா சினிமா திரைக்கு வந்து அறுபது வருசமாகுது. அதே போல், கமல்ஹாசன் திரைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு பெற்றது. ‘கமல்-60’ஐ முன்னிட்டு மூத்த பத்திரிகையாளர் ’மக்கள்குரல்’ராம்ஜி, குழந்தை நட்சத்திர கமல்ஹாசன் குறித்து நம்மிடையே பகிர்ந்துகொண்டார்.

’’அறுபது வருசத்துக்கு முன்னாளில் இதே மாசத்தில் இதே நாளில் தமிழ் திரையுலகில் பிறந்த குழந்தை நட்சத்திரம்தான் இன்றைய உலகநாயகன் கமல்ஹாசன். 12.8.160ல்தான் ஏவிஎம்மின் களத்தூர் கண்ணம்மா படம் ரிலீஸ். அதுல தமிழ்சினிமாவோட பில்லர்கள் ரெண்டு பேர் அறிமுகம். ஒன்று குழந்தை நட்சத்திரம் கமல்ஹாசன். இன்னொருவர் அப்படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றிய எஸ்.பி.முத்துராமன். கமல் என்கிற வைரக்கல்லை தோண்டி எடுத்தவர் ஏவிஎம் செட்டியார். பட்டை தீட்டி ஒளியூட்டியவர் இயக்குநர் சிகரம் பாலசந்தர். ஆளாக்கி வசூலில் உச்சம் தொட வைத்தவர் எஸ்.வி. முத்துராமன்.

’’இங்க எல்லாமே டூப்பு’’ – சத்தம் போட்டு கத்திய கமல்

60 வருசத்துக்கு முன்னால ஒரு ப்ளாஷ்பேக். ஏவி.எம். ஸ்டூடியோவுக்கு பின்புறம் மாந்தோப்பு. அங்கதான் களத்தூர் கண்ணம்மாவோட ஷூட்டிங். கமலை பார்த்த மாத்திரத்திலேயே டைரக்டர் பீம்சிங்கில் ஆரம்பித்து ஜெமினி, சாவித்திரின்னு செட்டுல இருந்த அத்தனை பேரும் ரொம்ப இம்ப்ரஷ் ஆகிட்டாங்க. மாமரத்தில் தொங்கின ஒரு மாங்காயை, ’’பறிச்சுத்தா?’’ அப்படின்னு ஜெமினியிடம் கேட்டார் கமலஹாசன். ஜெமினியும் பறிச்சுக்கொடுத்தார். ஆனா, அது உண்மையான மாங்கா அல்ல. பேப்பர்ல செஞ்ச மாங்கா.

படத்துல வர்ற ஒரு பாட்டு..’கண்களின் வார்த்தைகள் தெரியாதோ…’. அந்தப்பாட்டில் ஒரு போர்ஷன் எடுத்து முடிச்சாச்சு. சில மாசம் கழிச்சு அந்த போர்ஷனின் கண்டினியூட்டி எடுக்கணும். அதுக்காக அதே மாந்தோப்புக்கு போறாங்க. ஆனா அதுக்குள்ள மாங்கா சீசன் முடிஞ்சு போச்சு. அந்த பேப்பர் மாங்காதான் கண்டினியூட்டி மாங்காவா ஆச்சு. நிஜ மாங்கா இல்லைன்னு தெரிஞ்ச உடனேயே, ‘’யார ஏமாத்தப்பார்க்குறீங்க. இது டூப் மாங்கா’’ன்னு சொல்லிட்டு கையில் இருந்த மாங்காயை தூக்கி எறிஞ்சிட்டார் கமல்.

’’இங்க எல்லாமே டூப்பு’’ – சத்தம் போட்டு கத்திய கமல்

ஒரு நாள் வீடு மாதிரி இருந்த செட்டுக்குள்ள போய் சுற்றிப்பார்த்தார் கமல். வெளி்யில் இருந்து பார்த்தா நிஜ வீடு போலவே இருந்த அந்த செட்டைப்பார்த்து, ’’இதுவும் டூப்புதானா’’ என்று எல்லோரையும் கேட்டு துளைச்சு எடுத்துட்டாராம் கமல்.
அடுத்தநாள் சாவித்திரி கையில் இருந்து உப்புமாவை, வாங்கி சாப்பிடுற மாதிரி ஒரு சீன். உப்புமாவை கையில் வாங்கிய கமல், வாயில் போட்டு மென்னு சாப்பிடாமல் வாயில் போட்டு அடக்கி வச்சிக்கிட்டார். ஷாட் முடிஞ்சதும் கமல்கிட்ட வர்றார் பீம்சிங். ’’உப்புமாவை மென்னு விழுங்கி இருக்கலாமே. ஏன் வாயிலேயே போட்டு அடக்கி வச்சிகிட்டு இருக்குற கண்ணா?’’ன்னு கேட்டதும், அந்த உப்புமாவை துப்பிய கமல், ’’இங்க எல்லாமே டூப்பு. மாங்கா டூப்பு, வீடு டூப்பு, உப்புமா டூப்பு’’என்று சத்தம் போட்டு கத்தினாராம்.

அப்ப, ’’மாங்கா, வீடு மாதிரி உப்புமாவும் டூப்பு இல்ல. இது ஒரிஜினல்னு’’சொல்லி, எஸ்.பி.எம். சாப்பிட்டு காட்டினாராம்.

களத்தூர் கண்ணம்மாவுல கமலோட இந்த சுட்டித்தனத்த பார்த்து செட்டே அசந்துபோச்சாம். ஒரு சந்தர்ப்பத்துல ஏவி.எம் சரவணன் சார், ‘’விளையும் பயிர் முளையிலேயே தெரியும்னு நிரூபிச்சவர் சார் கமல்னு சொன்னார் பாருங்க. அது மறக்க முடியுமா?’’என்று நெகிழ்ந்தார் ராம்ஜி.