“நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி” : அமைச்சர் செல்லூர் ராஜூ

“நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி” : அமைச்சர் செல்லூர் ராஜூ

நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

“நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி” : அமைச்சர் செல்லூர் ராஜூ

கொரோனா மற்றும் புயல் காரணமாக தமிழக விவசாயிகளின் கடன் சுமையை குறைக்கும் வகையில், ரூ. 12, 110 கோடி கூட்டறவு பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.இதன் மூலம் 16.43 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 2016 ஆம் ஆண்டு விவசாய கடனை அதிமுக ரத்து செய்தது. அந்த வகையில் இரண்டாவது முறையாக விவசாய கடனை அதிமுக அரசு தள்ளுபடி செய்துள்ளது.

“நகை வைத்து பயிர்க்கடன் பெற்றிருந்தாலும் கடன் தள்ளுபடி” : அமைச்சர் செல்லூர் ராஜூ

இந்நிலையில் ஆவணங்கள் மட்டுமின்றி நகைகளை வைத்து பயிர்க்கடன் பெற்ற விவசாயிகளின் கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். முதல்வர் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பு தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று முதல்வர் அறிவித்திருந்த, அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.