ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

 

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!

ஊரடங்கு… எல்லோர் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறது. ஒட்டுமொத்த குடும்பமும் மாதக்கணக்கில் வீடுகளில் முடங்கிக் கிடக்கிறது. முதல்நாள் பார்த்த தன் தந்தையின் முகத்தை மறுநாள் காலையில் பார்த்த பிள்ளைகள் இப்போது நாள் முழுக்க பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். காலில் சக்கரம் கட்டிக்கொண்டு வேலைக்கு ஓடியவர்கள் தங்களது கால்களில் சங்கிலி பூட்டியதைப்போன்று உணர்கிறார்கள்.

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!
உடல்கோளாறு:
இதுநாள் வரை ஏதோ வெந்ததைத் தின்றுவிட்டு வேலைக்குச் சென்றவர்களுக்கு விதம்விதமாக உணவு கிடைக்கிறது. வேளாவேளைக்கு இருக்குமிடம் தேடி உணவு வருகிறது. ஆனால், பழைய தெம்பு இல்லை. லைஃப்ஸ்டைல் மாறிவிட்டதால் பலருக்கு புதிதுபுதிதாக உடல்கோளாறுகள் எட்டிப்பார்க்கின்றன.

தொப்பை, உடல் பருமன், வாய்வுக்கோளாறு என வரிசைகட்டி நிற்கும் அந்தக் கோளாறுகளை சரிசெய்ய மருத்துவமனைகளுக்கு செல்லமுடியாத நிலை. இதனால் பலர் தெரிந்தவர்களிடம் கேட்டும், இணையத்தில் தேடியும் என்னென்னவோ முயற்சிகளைச் செய்கிறார்கள்.

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!
உடற்பயிற்சி:
உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்று வருத்தப்பட வேண்டாம். உங்கள் வீட்டின் மொட்டைமாடியிலோ அல்லது வீட்டின் முற்றத்திலோ அல்லது வீட்டின் உள்பகுதியிலோ நீளமான எட்டு வடிவம் வரைந்து அதில் வடக்கும் தெற்குமாக நடக்கலாம். இந்தப் பயிற்சியைச் செய்தால் பல நோய்கள் எட்டிப்பார்க்காது.

அடுத்தது தோப்புக்கரணம், ஸ்கிப்பிங் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம். இவற்றைச் செய்ய இடவசதி தேவையில்லை. உங்கள் இல்லங்களிலேயே செய்து கொள்ளலாம். யாருடைய உதவியும் இல்லாமல் இந்தப் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

ஊரடங்கால் வீட்டில் முடங்கினாலும் உடல்நலனில் அக்கறை தேவை!
கம்ப்யூட்டர், செல்போன்:
நீண்டநேரம் ஒரே இடத்தில் உட்கார்வது, கணினி மற்றும் செல்போன்களை அதிகநேரம் பார்ப்பது போன்றவை வேறு சில பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பதால் அவற்றிலும் கவனம் வேண்டும். நம்மை அறியாமலே இத்தகைய தவறுகளை செய்துகொண்டிருப்போம் என்பதால் அவற்றைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.

வீடுகளில் இருப்பதால் நீங்கள் வழக்கமாக நீர் அருந்தும் அளவு குறைந்திருக்கலாம். எனவே, நீர் அருந்தும் விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். சமீபநாட்களாக சீதோஷ்ணநிலை மாறி மாறி வருகிறது என்பதால் உடல் விஷயத்தில் கவனம் தேவை.

இத்தனைக்காலம் பேசாத நண்பர்களுடன் பேசுங்கள். உறவினர்களுடன் விட்டுப்போன உறவை மீட்டெடுங்கள். குடும்பமாக உட்கார்ந்து சாப்பிட்டு நாட்களாகியிருக்கும் என்பதால் எல்லோரும் குறிப்பிட்ட நேரத்தில் ஒன்றுகூடி சாப்பிடுங்கள். மனம்விட்டுப் பேசுங்கள். நோய்களை வெல்லுங்கள்.