ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த சிறு வியாபாரிகள்!பேருந்துகள் இயங்க தொடங்கியதால் மந்த நிலை மாறியது!

 

ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த சிறு வியாபாரிகள்!பேருந்துகள் இயங்க தொடங்கியதால் மந்த நிலை மாறியது!

பேருந்துகள் இயங்க தொடங்கியதையடுத்து ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்தனர்.

ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நடைபெறுவது வழக்கமாகும். கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஜவுளி சந்தை 4 மாதங்களாக மூடப்பட்டிருந்தது. பின்னர் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டதையடுத்து கடந்த மாதம் ஜவுளி சந்தை மீண்டும் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆனால் பஸ் போக்குவரத்து இல்லாததால் சிறு வியாபாரிகள், தலைசுமை வியாபாரிகள் கலந்து கொள்ளவில்லை. மொத்த வியாபாரிகள் மட்டுமே கலந்து கொண்டதால் சில்லரை விற்பனை என்பது கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தது.

ஈரோடு ஜவுளி சந்தையில் குவிந்த சிறு வியாபாரிகள்!பேருந்துகள் இயங்க தொடங்கியதால் மந்த நிலை மாறியது!

இந்நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதையடுத்து நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு வெளிமாவட்டங்களில் இருந்து அதிக அளவில் வியாபாரிகள் வந்திருந்தனர். குறிப்பாக 5 மாதங்களுக்கு பிறகு நேற்று நடந்த ஜவுளி சந்தையில் சிறு வியாபாரிகளின் வருகை இருந்ததாக வியாபாரிகள் கூறினர்.

இது குறித்து ஈரோடு ஜவுளி சந்தை வியாபாரிகளிடம் நாம் பேசியபோது, ‘’கொரோனா ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு ஜவுளி சந்தை நடைபெற்று வந்த போதிலும் வெளிமாவட்ட மற்றும் சிறு வியாபாரிகளின் வருகை என்பது மிகவும் குறைவாகவே இருந்து வந்தது.

தற்போது பஸ் போக்குவரத்து தொடங்கி உள்ளதையடுத்து நேற்று நடைபெற்ற ஜவுளி சந்தைக்கு சிறு வியாபாரிகள் வருகை அதிக அளவில் காணப்பட்டது. மொத்த வியாபாரம் மட்டுமே இதுவரை நடைபெற்று வந்தது. சில்லரை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வாரம் சில்லரை வியாபாரம் ஓரளவு கை கொடுத்துள்ளது’’என்றார்கள்.