“இரவு ஊரடங்கின்போது வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை” – ஈரோடு மாவட்ட எஸ்.பி., தங்கதுரை

 

“இரவு ஊரடங்கின்போது வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை” – ஈரோடு மாவட்ட எஸ்.பி., தங்கதுரை

ஈரோடு

ஈரோட்டில் இரவு ஊரடங்கின்போது வெளியே சுற்றும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. தங்கதுரை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததன் காரணமாக நேற்று இரவு முதல் இரவுநேர ஊரடங்கும், ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளவும் தெரிவித்தார்.

இதில், இரவுநேர ஊரடங்கான இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை சரக்கு வாகனங்கள், மருத்துவ சிகிச்சைக்கு செல்பவர்கள் என அரசு அனுமதித்துள்ள வாகனங்கள் தொடர்ந்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.

“இரவு ஊரடங்கின்போது வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை” – ஈரோடு மாவட்ட எஸ்.பி., தங்கதுரை

அதேபோல், இரவுநேரத்தில் எங்கும் தொழிற்சாலைகளில் பணிபுரிபவர்கள், அவர்களது நிறுவனத்தின் அடையாள அட்டை மற்றும் பணி அனுமதி கடிதத்துடன் வந்தால் அனுமதி அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

சாலைகளில் வாகனம் நடமாட்டத்தை குறைக்கும் வகையில் இருவழி சாலைகள் இரவு 10 மணிக்குப் பின், ஒருவழி சாலையாக மாற்றப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படும் என்று கூறிய அவர், ஊரடங்கை மீறி சாலைகளிலும், பொது இடங்களில் நடமாடும் நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதோடு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.

“இரவு ஊரடங்கின்போது வெளியே சுற்றினால் கடும் நடவடிக்கை” – ஈரோடு மாவட்ட எஸ்.பி., தங்கதுரை

அதேபோல், ஈரோடு மாவட்டத்தில் உள்ள 2 மாநில சோதனைச் சாவடிகள், மாவட்டத்தில் உள்ள 12 சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிக்கப்படும் என கூறிய அவர், தேவை ஏற்பட்டால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு, சரக்கு – மருத்துவ சிகிச்சைக்கு செல்வோர் மற்றும் அரசு வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.