ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலி… ஈரோட்டில் தனியார் ஆம்புலன்ஸ்கள் இயக்கம் நிறுத்தம்…

 

ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலி… ஈரோட்டில் தனியார் ஆம்புலன்ஸ்கள் இயக்கம் நிறுத்தம்…

ஈரோடு

ஈரோடில் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் இயங்காததால், நோயாளிகள் அவதிக்கு உள்ளாகி உள்ளனர்.

ஈரோட்டில் சுமார் 300-க்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் செயல்பட்டு வருகிறது. நோயாளிகளை துரிதமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் இவர்களின் பங்களிப்பு இன்றியமையாதது. தற்போதைய சூழலில், கொரோனா நோயாளிகள் மருத்துவமனைகளுக்கு செல்ல முழுமையாக ஆம்புலன்ஸ் சேவையையே நம்பியுள்ளனர்.

இந்த நிலையில், ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக ஈரோட்டில் செயல்பட்டு வரும் நூற்றுக்கும் மேற்பட்ட தனியார் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் ஆம்புலன்ஸ் கிடைக்காமல் நோயாளிகள் கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு எதிரொலி… ஈரோட்டில் தனியார் ஆம்புலன்ஸ்கள் இயக்கம் நிறுத்தம்…

ஏற்கனவே பல மருத்துவமனைகளில் படுக்கை பற்றாக்குறை நிலவுவதால் மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்ஸில் காத்திருக்கின்றனர். தற்பொழுது ஆக்ஸிஜன் பற்றாக்குறை காரணமாக தனியார் ஆம்புலன்ஸ் சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால், கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, பெண் ஒருவர் ஆம்புலன்ஸ் கேட்டு ஓட்டுனரிடம் கதறி அழுத ஆடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக அரசு, தனியாக ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் ஆக்சிஜன் கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களும், உரிமையாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.