ஈரோடு- மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்ட அமைச்சர்கள்

 

ஈரோடு- மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்ட அமைச்சர்கள்

நாட்டு மீன் இனங்களை பாதுகாக்கும் வகையிலும், உள்நாட்டு மீன் உற்பத்தியை பெருக்கும் வகையிலும் நாட்டு ரக மீன்குஞ்சுகள் பவானி ஆற்றில் விடப்பட்டன.
இந்த நாட்டு ரக மீன் குஞ்சுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் ஆற்றில் விட்டனர்.

ஈரோடு- மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்ட அமைச்சர்கள்


அப்போது பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கெண்டை மீன் இனங்களை பாதுகாத்திடும் வகையில் பவானிசாகர் அரசு மீன்பண்ணைகளில் 4 இலட்சம்
நாட்டின கெண்டை வகை குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டன. அதில் முதற்கட்டமாக 20 ஆயிரம் நாட்டின சேல் மற்றும் கல்பாசு கெண்டை
பெருவிரலிகளை சத்தியமங்கலம், ஆற்றுப்பிள்ளையார் கோவில் படித்துறையில் விடப்படுகின்றன.

ஈரோடு- மீன் குஞ்சுகளை ஆற்றில் விட்ட அமைச்சர்கள்


எஞ்சியுள்ள 3.80 இலட்சம் குஞ்சுகளை பவானி ஆற்றில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களில் ஓரிரு
தினங்களில் விடப்படும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பவானிசாகர் மீன்வளத் துணை இயக்குநர் உள்பட ஏராளமான அதிகாரிகள் கலந்து கொண்டனர்.